தைராய்டு கண்நோய் 25% -க்கும் கூடுதலாக அதிகரிப்பு- டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

தைராய்டு கண்நோய் 25% -க்கும் கூடுதலாக அதிகரிப்பு-  டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை 


“பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சனைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான  தைராய்டு கண் நோய் (TED) பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னை மாநகரில் ஏறக்குறைய 25% அதிகரித்திருக்கிறது.  

தாமதிக்கப்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் காரணமாகவும் பெருந்தொற்று காலத்தின்போது அதிகரித்த மனஅழுத்த அளவுகளினாலும் கட்டுப்பாட்டின் கீழ் தைராய்டு அளவுகள் இல்லாத நிலை இந்த TED பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு கடுமையாக உயர்ந்திருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும்,” என்கிறார் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், மருத்துவ சேவைகள் துறையின் தலைவருமான டாக்டர். அஸ்வின் அகர்வால்.


சென்னையில்  ஊடகவியலாளர் சந்திப்பின்போது பேசிய அவர்:


தைராய்டு கண் நோய் பார்வைத்திறனை அச்சுறுத்துவதாகவும், அதனை பலவீனப்படுத்துவதாகவும் இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.  தோற்றத்தை சீர்குலைக்கக்கூடிய நிலை இது என்று கூறிய அவர், “கண்விழி / விழிக்கோளத்திற்கு பின்புறத்திலுள்ள திசுக்களும் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதியும் வீங்கி, வீக்கமடைந்ததாக கண்ணை தோன்றச்செய்யும்.  அருவருப்பூட்டும் தோற்றத்தை இது நோயாளிக்குத் தரும்.  முகத்தோற்றத்தை சீர்குலைக்கும்; உணர்வுரீதியான மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கக்கூடும்.  தைராய்டு சுரப்பியின் மிகை செயலாக்கம் (கிரேவ்ஸ் நோய் என்றும் அழைக்கப்படுவது) அல்லது தைராய்டு சுரப்பியின் குறைவான செயலாக்கம் என்ற பாதிப்புள்ள நோயாளிகளிடம் தைராய்டு கண் நோய் ஏற்படுவது காணப்படுகிறது.  அயோடின் பற்றாக்குறையின் காரணமாக இது பொதுவாக ஏற்படுகிறது.  தைராய்டு நோயுள்ள நோயாளிகளில் 10% நபர்களுக்கு உடலில் இயல்பான தைராய்டு அளவுகள் இருக்கின்றன.


கண் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மற்றும் அழகியல் சேவைகள் துறையின் தலைவர் டாக்டர். பிரித்தி உதய் பேசுகையில்:


“பெருந்தொற்று காலத்தின்போது தைராய்டு கண் நோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை நாங்கள் கவனித்திருக்கிறோம்.  கோவிட் – 19 வைரஸ் தைராய்டு சுரப்பியை ஊடுருவவும் மற்றும் நோயெதிர்ப்பு இயக்க முறைகளை தூண்டிவிடவும் திறன்கொண்டது என்பது இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.  வைரஸுக்கான எதிர்ப்பு மருந்துகள் தைராய்டு சுரப்பியை பாதிப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது.  மருத்துவ பரிசோதனையகங்களும், மருத்துவமனைகளும் பெருந்தொற்று காலத்தின்போது அணுகமுடியாதவாறு இருந்ததும் மற்றும் கோவிட் – 19 தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக மருத்துவமனைக்கு செல்வதை நோயாளிகள் தவிர்த்ததனாலும் தைராய்டு அளவுகளை உரிய காலஅளவுகளில் பரிசோதிக்க தவறியது இதற்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம்.  இதன் காரணமாக, கட்டுப்பாடற்ற தைராய்டு அளவுகள் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை இக்காலகட்டத்தில் அதிகரித்திருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

 

ஒரு சிக்கலான தன் தடுப்பாற்று நோயாக TED இருக்கிறது மற்றும் அநேக நேரங்களில் மனஅழுத்தம் நமது உடலில் தன் தடுப்பாற்றலை தூண்டிவிடுகிறது. “மனஅழுத்தம் இந்நோயை மேலும் தீவிரமாக்கிவிடும்; விவாகரத்து, அன்புக்குரியவர்களின் உயிரிழப்பு அல்லது வேலையிழப்பு போன்ற கடினமான வாழ்க்கை நிகழ்வுகள் நோயாளிகளுக்கு ஏற்படும்போது  இந்த கண்நோய் தீவிரமடைந்து வெளிப்படுகிறது,” என்று குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி, இந்நோய் குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வின் காரணமாக,  இந்த பாதிப்பு நிலை அதிக நோயாளிகளிடம் பரிசோதனையில் உறுதி செய்யப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

 

தைராய்டு கண்நோயின் அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கும் அடையாளங்கள் பற்றி டாக்டர். பிரித்தி கீழ்க்கண்டவாறு விளக்கமளித்தார்: “காலை வேளையிலும் மற்றும் சூரிய ஒளியிலும் கண் இமைகள் வீங்குவதும், கண் சிவத்தல், அசௌகரியம் மற்றும் கண்ணிலிருந்து நீர் வடிதல் ஆகியவை TED பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாகும்; குறிப்பாக நீண்ட நேரம் வாசிக்கும்போது இரட்டைப்பார்வை; கண்களை முழுமையாக மூட இயலாமை; குறிப்பாக ஒரு கண் மூடப்படும்போது பார்வைத்திறன் குறைவது அல்லது மங்கலாக தெரிவது ஆகியவையும் இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.  தைராய்டு கண்நோயால் ஏற்படுகின்ற அழகியல் பிரச்சனைகளுள் கண்கள் வீங்கி பெரிதாக தெரிவது, அருவருப்பான தோற்றம், ஒருக்கணிப்பு பார்வை மற்றும் கண் இமைகளின் அதைப்பு ஆகியவை இருக்கின்றன.  திரவ சேகரிப்பினால் அல்லாமல், கொழுப்பு பட்டைகள் பிதுக்கத்தின் காரணமாக, தைராய்டு கண்நோயின் தீவிர செயலற்ற நிலையின்போது வீக்கமடைந்த கண் இமைகள் காணப்படுகின்றன. இது தானாகவே சரியாகிவிடாது.    இமை சீரமைப்பு வடிவத்திலான காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை, கண்களுக்கு ஓய்வெடுத்த மற்றும் புத்துணர்ச்சி பெற்ற தோற்றத்தை திரும்பவும் கொண்டுவரக்கூடும்.”


கட்டுப்படுத்தப்படாத தைராய்டு நோயுள்ளவர்கள், வயதான முதியோர்கள், ஆண்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் புகைபிடிப்பவர்கள் போன்ற நோயாளிகளுக்கு தீவிர வடிவிலான தைராய்டு கண்நோய் ஏற்படுவதற்கு அதிக இடர்வாய்ப்பு இருக்கிறது.  தைராய்டு கண்நோய் மீது புகைப்பிடித்தலும், நீரிழிவும் பாதகமான விளைவுகளை கொண்டிருக்கின்றன. இக்கண்நோயை கட்டுப்படுத்துவதில் புகைப்பிடித்தலை கைவிடுவதும், நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் பெருமளவிற்கு உதவும் என்றும் டாக்டர் பிரித்தி குறிப்பிட்டார்.  


இப்பாதிப்பு நிலைக்கான சிகிச்சை பற்றி பேசுகையில், உடலில் தைராய்டு அளவுகளை சரிசெய்வது அல்லது நிலையாக வைத்துக்கொள்வதனால் மட்டும்  கண் பாதிப்புநிலையை குணமாக்க இயலாது; ஆனால் சிறப்பான கட்டுப்பாட்டிற்கு இது உதவும். இப்பாதிப்பு நிலைக்கான சிகிச்சை சமீப காலங்களில் பெருமளவு வளர்ச்சி கண்டிருக்கிறது.  ஆகவே, தைராய்டு கண் நோய்க்கான சிகிச்சை அவசியமாகும்.  பெரும்பான்மையான நோயாளிகளுக்கு தீவிர செயலாக்க காலகட்டத்தில் மிதமான அறிகுறிகளே இருக்கின்றன. மருந்துகளைக் கொண்டு அவைகளை குணப்படுத்திவிடலாம்.  தீவிர செயலாக்க நிலையில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளை லூப்ரிகன்ட்கள், ஸ்டீராய்டுகள், கதிரியக்கசிகிச்சை, நோயெதிர்ப்புத்திறன் ஒடுக்கிகள் போன்றவற்றின் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.  தீவிர செயலாக்கமற்ற காலகட்டத்தின்போது பெரும்பான்மையான நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படும். எனினும், அந்த நபர், நோயின் தற்போதைய நிலைமை மற்றும் அறிகுறிகளைச் சார்ந்து இதற்கான சிகிச்சை மாறுபடும்.  



டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி:


தைராய்டு கண்நோய்க்கு சுயமுனைப்புடன் ஸ்க்ரீனிங் செய்துகொள்ள வேண்டுமென்று மேற்குறிப்பிடப்பட்ட இடர்வாய்ப்பிலுள்ள மக்களை  வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.  “தைராய்டு ஹார்மோன் அளவுகளை கட்டுக்குள் வைத்திருப்பதும் மற்றும் கண் அறுவைசிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவமுள்ள மருத்துவரிடம் குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனை செய்துகொள்வதும், தீவிரமான நோய் வராமல் முன்தடுப்பதற்கு ஒரே வழிமுறையாகும்,” என்று அவர் கூறினார்.

 

சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் இது கருவிழியையும், பார்வை நரம்பையும் பாதிக்கும் என்பதால், பார்வைத்திறனுக்கு அச்சுறுத்தல் செய்வதாக இருப்பதால் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து சிகிச்சைபெறுவது முக்கியம் மற்றும் இப்பாதிப்பு, கண்ணில் அழுத்தத்தை அதிகரிப்பதுடன், கண்புரை நோயையும் உருவாக்கக்கூடும் என்று அவர் வலியுறுத்தினார்.  “ஆரம்பநிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுமானால், தைராய்டு கண்நோயின் பெரும்பாலான அறிகுறிகளை குணப்படுத்தி முந்தைய இயல்புநிலைக்கு கொண்டு வரமுடியும்.  உரிய நேரத்திற்குள் சிகிச்சை நடவடிக்கையை எடுப்பதன் மூலம் பெரும்பாலான நோயாளிகளுக்கு அவர்களது இயல்பான தோற்றத்தையும், செயல்பாட்டையும் எங்களால் இப்போது மீண்டும் கொண்டுவர முடியும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.


தைராய்டு கண் நோய், மருத்துவ பணியாளர்கள் மத்தியில் அதற்கு உரிய கவனத்தை இன்னும் பெறவில்லை.  கண் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள் வழங்கக்கூடிய பல்வேறு சிகிச்சைகள் பற்றி பொதுமக்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிந்திருக்கிறது.  இதுகுறித்த அக்கறையின்மைக்கும் கூடுதலாக, நோய் மேலாண்மைக்கு தரநிலைக்கு உட்படுத்தப்பட்ட நெறிமுறைகள் இல்லை என்பதும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இதன் விளைவாக நோயாளிகளின் சிகிச்சை மேலாண்மையில் ஒரே மாதிரியான நிலைப்புத்தன்மை இருப்பதில்லை.



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.