'பன்றிக்கு நன்றி சொல்லி' – திரைப்பட விமர்சனம்
நடிகர் : நிஷாந்த் | |
நடிகை : அம்ரிதா | |
இயக்குனர் : பாலா அரன் | |
இசை : சுரேன் விகாஷ் | |
ஓளிப்பதிவு : விக்னேஷ் செல்வராஜ் |
படத்தின் தலைப்பை பார்த்தவுடன் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு பேசிய வசனம் தான் நினைவுக்கு வருகிறது. நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பாலா அரன் எழுதி இயக்கியுள்ளார். சுரேன் விகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். சோனி லிவ்வில் நேரடியாக இப்படம் வெளியாகியுள்ளது.
1000 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக பன்றி வடிவ சிலை ஒன்று இருக்கிறது. மந்திர சக்தி இருப்பதாக நம்பப்படும் அந்த சிலையை கடத்துவதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த ஒரு போலீஸ்காரர், ஒரு ரவுடி கும்பல் மற்றும் ஆர்வமுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் ஒன்றாக சேர்ந்து அந்த சிலையை தேடுகிறார்கள். இறுதியில் அந்த சிலை யாரிடம் சென்றது? என்பதுதான் படத்தின் கதை.
நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். படத்தின் திரைக்கதை வேறு எங்கும் செல்லாமல் கதையை நோக்கி பயணிக்கிறது. ஜோ மல்லூரி சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார்.
சுரேன் விகாஷ் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை ஒரு சில இடங்களில் பொருந்துகிறது. படத்தின் ஒளிப்பதிவு ஓகே. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஷாந்த், விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், செல்லா, வியன் மற்றும் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் எந்த குறையும் இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
கிரைம் காமெடியில் எழுதப்பட்ட கதையை, சுவாரசியமான திரைக்கதையின் மூலம் சற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர் பாலா அரன். படத்தில் வடிவமைத்திருக்கும் சில திருப்பங்கள் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் இந்த பன்றியை ஒரு முறை பார்க்கலாம்....
கருத்துரையிடுக