'கடைசி விவசாயி' திரைப்பட விமர்சனம்

'கடைசி விவசாயி' திரைப்பட விமர்சனம் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் கடைசி விவசாயி. இந்த படத்துக்கு, இயக்கம் மட்டும் இல்லாமல், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு என சகல பணிகளையும் கவனித்திருக்கிறார் மணிகண்டன். சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைக்க, அறிவு இப்படத்துக்கான பாடலை எழுதியிருக்கிறார்.

ஊரில் மழை இல்லாததால், விவசாயத்தை மறந்துவிட்ட உசிலம்பட்டி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கோவில் திருவிழாவை நடத்தினால் மழை வரும் என நம்புகிறார்கள். அதற்கென நடைமுறையில் இருக்கும் பாரம்பரிய முறைகளில், மண் பானை செய்வதில் தொடங்கி, அரிசி, திருவிழாவுக்கான இசைக்கருவிகள் என எல்லாமே வழக்கமாக நடைமுறையில் இருக்கும் முறையையே பின்பற்ற முடிவு செய்கிறார்கள். திருவிழா நடத்தி நீண்டகாலம் ஆகிவிட்டதால் எல்லோருக்கும் தொடர்பு விட்டுப்போகிறது. என்னென்ன தடைகள் வருகிறது, எப்படி தடைகளைக் கடக்கிறார்கள்? கடைசியில் திருவிழா நடந்ததா இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

காதலால் கிறுக்குப் பிடித்து அலையும் ராமய்யா பாத்திரத்தில் விஜய் சேதுபதி, ஊரின் விவசயியாக நல்லாண்டி, விவசாய நிலத்தை விற்று யானை வாங்கி பிழைப்பு நடத்தும் யோகிபாபு, என எல்லோரும் அவரவர் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் பாத்திரம் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தாலும் கதையில் ஒட்டாதது போலவே இருக்கிறது.

இயற்கையான முறையில் விவசாயம் எப்படி இருந்தது? காலப்போக்கில் எப்படி அது செயற்கை ரசாயன உரங்களுக்கு மாறியது, ரசாயன உரங்களை ஏற்காமல் இயற்கை விவசாயத்தை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அது எப்படி இருக்கும் உள்ளிட்டவையெல்லாம் தெள்ளத் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. முந்தைய தலைமுறையில் இருக்கும் சாதிய உணர்வை, அடுத்த தலைமுறை எப்படி தகர்த்து எறிகிறது என்பதும் நாசுக்காக சொல்லப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவில் இருந்து வசனத்தில் இருக்கும் வட்டார வழக்கு வரை படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களையே இந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பது இந்த படத்துக்கு பெரும் பலம்.

கடைசி விவசாயி படம் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். எழுத்தாளர் சுகுணா திவாகரும் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். "கடைசி விவசாயி பிரிவியூ ஷோ பார்த்தேன். பொதுவாக 'அவர் நடிக்கவில்லை. பாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார்' என்போம். உண்மையில் எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் அப்படி நிகழ்ந்த தருணங்கள் மிகச்சில. அதில் ஒன்று கடைசி விவசாயி. அப்படி மாயாண்டி என்ற  மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் நல்லாண்டி என்னும் முதியவர்.

தொழில்முறை நடிகர்களாய் அல்லாத மனிதர்களை நடிக்க வைப்பது எளிதான காரியமில்லை. இதில் நல்லாண்டி ஏதோ அவர் வீட்டிலும் வயலிலும் இருக்கிறாரே தவிர திரையில் நடிப்பதாகத் தோன்றவே இல்லை. படம் வெளியாகும்போது அவர் உயிருடன் இல்லை என்பது துயரமானது."இவரைப் போல் படம் பார்த்த அனைவரும் கடைசி விவசாயியை கொண்டாடி வருகிறார்கள். என்று எழுதியுள்ளார்.

மொத்தத்தில்  'கடைசி விவசாயி' மெய்யான உழவன் 

Saravanan.S✍️


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.