ரஷ்யா - உக்ரைன் போர்: விலை உயர்வு?!

ரஷ்யா - உக்ரைன் போர்: விலை உயர்வு?!  


ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்தியாவில் சில நுகர்வு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவை என்ன? யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்கிற விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 4வது வாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால், அந்த பொருட்களை சார்ந்திருக்கும் உலக நாடுகளுக்கு பாதிப்பு தற்போது ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதைத் தவிர்த்து ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இவை சர்வதேச அளவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு மறைமுகமாக வழி வகுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 

தற்போது போர் நடைபெற்று வருவதால் சமையல் எண்ணெய்யின் உற்பத்தி குறைந்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான தேவையும் இன்னொரு பக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களில் சமையல் எண்ணெய்யின் விலை உயரலாம். இதை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பருப்பு வகைகள்

சர்வதேச சந்தைக்கு வரும் பருப்பு, தானிய வகைகளில் 29 சதவீதம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பாவின் பிரேக் ஃபாஸ்ட் (காலை உணவு) என்று உக்ரைன் பொதுவாக அழைக்கப்படுகிறது.

போர் தொடர்ந்து நடைபெற்றால், பருப்பு தானிய வகைகளின் விலையும் உயரும். குறிப்பாக ரஷ்ய படைகள் உக்ரைனின் விவசாய நிலங்களின் மீதும் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் உணவு பொருட்களின் விலையில் நிச்சயமற்ற தன்மை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சோளம்

உலகம் முழுவதும் சோளத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரைனும் ஒன்று. துறைமுகங்கள், தரைவழிப் பாதைகள் மற்றும் விமான சரக்குகள் வழியாக உக்ரைன் மேற்கொள்ளும் ஏற்றுமதி குறைந்திருக்கிறது. இதன் விளைவாக, சோளத்தின் விலை உயர்ந்துள்ளது. இது லட்சக்கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கனிமங்கள், உலோகங்கள்

நிக்கல், பிளாட்டினம், பல்லேடியம் மற்றும் தங்கம் போன்ற அரிய உலோகங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. ரஷ்யா மீதான கடுமையான பொருளாதாரத் தடைகள் உலோகங்கள் உலகச் சந்தையை அடைவதைத் தடுத்து, உலோகத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் நிக்கலின் விலை ஒரு டன் 100,000 டாலர் வரை உயர்ந்துள்ளது. போர் இன்னும் தீவிரம் அடையும்போது எஃகு விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு தற்போது 100-டாலருக்கு மேல் உள்ளது. போர் காரணமாக, இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் விலைகள் உயர நிலை உருவாகக்கூடும்.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இருக்கும் இந்தியாவிற்கு விலைவாசி உயர்வு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

விமானப் பயணம் - போக்குவரத்து

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்திற்கு மேல் இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும். உலகம் முழுவதும் விமான கட்டணமும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.