'டேக் டைவர்ஷன்' திரைப்பட விமர்சனம்
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். 'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார். மக்கள் செய்தி தொடர்பாளராக சக்தி சரவணன்.
சாக்குபூக்கு சொல்லியே பல பெண்களை திருமணத்துக்கு நிராகரித்த ஐ.டி நிறுவன இளைஞன் ஒருவன் (சிவகுமார்) ஒரு நிலையில் முதன் முதலில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறான். நிச்சயதார்த்தம் நடைபெறும் தினத்தன்று ஐ.டி நிறுவன அதிகாரி (ஜான் விஜய்) அவனுக்கு போன் செய்து சக ஊழியரான இளம்பெண் ஒருவரை ( பாடினி குமார்) இரண்டு நாளாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரைப் பார்த்து என்ன என்று தகவல் சொல்லி விட்டு நிச்சயதார்த்தத்துக்குப் போகும்படியும் பணிக்கிறார்.
அங்கே போனால் அந்தப் பெண் 70 கிட்ஸ் தாதா ஒருவனின் ( ராம்ஸ் ) பிடியில் இருப்பது தெரிகிறது.....
அதன் பின் நடக்கும் சம்பவங்களே டேக் டைவர்சன்.... சரியான சமயத்தில் டேக் டைவர்சன் எடுப்பது அவசியம் தான். அதற்காக எதற்கு எடுத்தாலும் டேக் டைவர்சன் எடுத்தால் போக வேண்டிய ஊர் அங்கேயே இருக்கும்.
நாம் இங்கேயே இருப்போம் என்று சொல்ல…..முயன்று இருக்கிறார்கள் . திரைக்கதையில் இவர்களே எதற்கு எடுத்தாலும் ஏகப்பட்ட டைவர்ஷன் எடுக்கிறார்கள். அல்லது பயணமே போகாமல் திரைக்கதையில் நின்ற இடத்திலேயே நிற்கிறார்கள். வண்டி வண்டியாய் வசனங்கள் – அதுவும் சுவாரஸ்யம் இல்லாமல், தீர்மானமற்ற படத் தொகுப்பு ஆகியவை குறைகள்.
நாயகிக்கு முக்கியமான வில்லன் யார் என்ற அந்த திருப்பமும் அடுத்து வரும் நெகிழ்வான காட்சியும் அருமை. முற்றிலும் புதிய தோற்றத்தில் ராம்ஸ் நடிப்பு ஓகே. ஜான் விஜய் வழக்கம் போல ஓகே. ஜோஸ் பிராங்க்ளினின் பின்னணி இசை அருமை.
மொத்தத்தில் இந்த 'டேக் டைவர்ஷன்' சலிப்பு இல்லாத வழி...
கருத்துரையிடுக