'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' விமர்சனம்

'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' விமர்சனம் 

எல்லாருக்குமான இந்த உலகத்தில் மனிதர் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் படைப்பாக உருவாகியிருக்கிறது 'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' 3D யில் பட்டய கிளப்புது காட்சிகள்... 

மனிதர்களும் டைனோசர்களும் ஒருங்கே வாழும் யுகத்தில் இருக்கும் பயோசின் சரணாலயத்தில் இயற்கையின் சமநிலையை அழிக்கும் வகையிலும், உலகம் முழுக்க உணவு வறட்சியை ஏற்படுத்தும் வகையிலும் வெட்டுக்கிளிகள் (லோகஸ்ட்) மரபணு மாற்றம் செய்யபட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதன் DNA மாதிரியை கைப்பற்ற பயோசின்னுக்குள் டாக்டர் எல்லிசாட்லர் (லாரா டெர்ன்) மற்றும் டாக்டர் ஆலன் (சாம் நீல்) நுழைகின்றனர்.இதற்கு அப்படி மற்றோரு புறத்தில் ஓவன் (கிறிஸ் பிராட்) மற்றும் கிளாரி (பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்) கடத்தப்பட்ட தங்களது மகளை மீட்க பயோசின்னுக்குள் நுழைகின்றனர்.

பயோசின்னுக்குள் நுழைந்த இந்த இரண்டு தரப்பினும், நுழைந்ததற்கான அவர்களின் காரணம் நிறைவேறியதா? எப்படி வெளியேறினர்? - இந்தக் கேள்விகளுக்கான விடைகளை சிறந்த காட்சியனுபவத்துடன் சொல்ல முயற்சித்திருக்கும் படம் 'ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன்'. 

விஎஃப்எக்ஸ், பின்னணி இசை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. குறிப்பாக டைனோசருக்கு பயந்து ஓடி, தண்ணீருக்கு அடியில் பிரைஸ் டல்லாஸ் மூழ்கி ஒளிந்திருக்கும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் உண்மையில் பாராட்ட வைக்கிறது.

ஒளிப்பதிவும், விஎஃப்எக்ஸும் அந்தக் காட்சிக்கான தரத்தை கூட்டியிருக்கும். படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவின் உழைப்பும் அபாராமானது. படத்தின் இறுதிக்காட்சியில் 'என் குட்டிய என்கிட்டையே வந்து கொடுத்துட்ட' என்பது போல தாய் டைனோசர் கிறிஸ் பிராட்டை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் காட்சி நெகிழவைக்கிறது.

இறுதியில் வரும், 'இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல... எல்லா உயிரினங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த உலகத்துல நம்மளும் ஒரு பகுதிதான்' என்ற வசனம் படத்திலிருந்து வெளியே வந்தபிறகும் மனதில் தேங்கிவிடுகிறது. மற்றபடி, படத்தின் தமிழ் டப்பிங் சிறப்பாகவே வந்திருக்கிறது.

மொத்தத்தில் இந்த 'ஜுராசிக் வேர்ல்டு' வேற உலகம்.... 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.