மதுரையில் "இசையென்றால் இளையராஜா" NOISE AND GRAINS - ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

மதுரையில் "இசையென்றால்  இளையராஜா"  NOISE AND GRAINS - ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!  




NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து , "இசையென்றால் இளையராஜா " எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் , இசைஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில் , மிகவும் குறைந்தவிலையில்  நுழைவுக்கட்டணம், ஆரம்ப விலையாய்   நிர்ணயிக்கப் பட்டுள்ளது.




NOISE AND GRAINS நிறுவனம்,   இசைப்புயல் AR  ரஹ்மான்  அவர்களின் "நெஞ்சே எழு", பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமின் "ALL  LOVE  NO  HATE "  இசை நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்களின்  "மடை திறந்து" , மறைந்த பின்னணி பாடகர் S P  B மற்றும் K. J. யேசுதாஸ் இணைந்து சிங்கப்பூரில் "VOICE  OF  லெஜெண்ட்"  , பிரபல பின்னணி பாடகர்கள்  ஸ்ரீனிவாஸ் , விஜயபிரகாஷ் அவர்களின் "மடை திறந்து" ,  ராக் ஸ்டார் அனிருத் "LIVE  IN  SINGAPORE "எனும் நிகழ்ச்சிகளை நடத்தி இசை ரசிகர்களின், மனதை வருடிச்செல்ல வைத்தது. 

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து "நம்ம  ஊர் திருவிழா" நிகழ்ச்சியும்  மற்றும்  பிரமாண்டமாய் "லெஜெண்ட்" திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.