Maayoon Movie Review: 'மாயோன்' விமர்சனம் பார்ப்போமா?!

Maayoon Movie Review: 'மாயோன்' விமர்சனம் பார்ப்போமா?! 



நடிகர் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் அருண் மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் அவருக்கு சொந்தமான டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் 'மாயோன்'.

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள புராதன கோயில் ஒன்றில் புதையல் இருப்பதை ஓலைச்சுவடிகள் மூலம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கண்டறிகிறார். ஏற்கெனவே சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் அவர், புதையலை கண்டறிந்து வாழ்வில் செட்டிலாகிவிட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டத்தில் சிபிராஜும் இணைந்துவிட இறுதியில் புதையலை கண்டறிந்தார்களா? இல்லையா? என்பது தான் 'மாயோன்' படத்தின் திரைக்கதை.

சிபி சத்யராஜ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தான்யா ரவிச்சந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், நாயகி என அந்தஸ்துக்காக வந்துசெல்கிறார். ஹரிஷ் பேரடி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் (பக்ஸ்), ராதாரவி கதாபாத்திரத்துக்கான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். 

வில்லன் கதாபாத்திரத்திற்காக ஆராஷ் ஷா என்பவரை பிரத்யேகமாக இறக்குமதி செய்திருக்கிறார்கள்.  படத்தின் மூலம், ஆன்மிகம், அறிவியலை கலந்து கொண்டு சேர்த்திருக்க முயற்சித்திருக்கிறார்கள். 'வாழ்க்கையை இரண்டு வகையில் வாழலாம். ஒன்று அற்புதம் அதிசயம் இல்லாதது போல நம்பிக்கொண்டும், மற்றொன்று அற்புதம் அதிசயம் இருப்பது போல நம்பியும்'' என படம் தொடங்குவதற்கு முன்பே ஒரு வசனம் வருகிறது.

அதேபோலத்தான் அறிவியலை நம்பி ஒருக்கூட்டமும், ஆன்மிகத்தை நம்பி ஒரு கூட்டமும் இருப்பது போல காட்டப்படுகிறது. சிலை கடத்தல், அதற்கு பின்னால் இருக்கும் கும்பல் குறித்து ஓவர் ஹைப் கொடுத்துவிட்டு இறுதியில் அந்த ஹைப் கொடுத்த வில்லன் அடிவாங்க இந்தியா வரும் காட்சிகள் செயற்கை. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதியின் பெரும்பகுதி இருட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் தன் உழைப்பைக்கொட்டி திரையில் விருந்து படைக்கிறார். 

மொத்தத்தில் 'மாயோன்' ஆன்மீகம் கலந்த கலவை.... 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.