'விக்ரம்' விமர்சனம்

'விக்ரம்' விமர்சனம் 
கொலைகளும், அதற்கான பழிவாங்கலும் அதற்குப் பின்னால் இயங்கும் மிகப்பெரிய நெட்வொர்க்கும் தான் இந்த `விக்ரம்'

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றனர். இதற்கான காரணத்தையும், குற்றவாளிகளையும் கண்டறிய, காவல் துறையினரால் ஃபஹத் ஃபாசில் தலைமையிலான ரகசிய குழு ஒன்று நியமிக்கப்படுகின்றது. இந்தக் குழு விசாரணையில் இறங்க, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளை கொன்றது யார்? அவர்கள் ஏன் கொல்லப்படுகின்றனர்? இதற்கான பின்புலம் என்ன? - இவற்றை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ஃபஹத் ஃபாசிலுடன் சேர்ந்து நமக்கும் விடையளிக்கும் படைப்பு தான் 'விக்ரம்'. 

படத்தின் முதல் பாதி முழுவதையும் தனது முக பாவனைகளால் மட்டுமே சுமந்து சென்றிருக்கிறார் ஃபஹத் ஃபாசில். 'எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது... உங்களுக்கு இருந்தால் மீறப்படும்' என்று திமிரான உடல் மொழியுடன் இரக்கமில்லாத துருவித் துருவி விசாரிக்கும் ஏஜெண்டாக மிரட்டுகிறார். குழந்தையை மீட்க போராடும் காட்சிகளில் உச்சம் தொடுகிறார். முதல் பாதியை ஃபஹத் ஃபாசிலிடம் ஒப்படைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் லோகேஷ். வித்தியாசமான முக பாவனைகள், பல்லை திறக்காமல் பேசும் வார்த்தைகள், அலட்டிக்கொள்ளாத உடல் மொழி என அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. சட்டையின்றி நடந்து வரும் அவரது இன்ட்ரோ காட்சிகள், நடிப்பின் மீதான அவரது காதலை காட்டுகிறது.

குறிப்பாக 'பாப்பாய்' கார்ட்டூனில் கீரையை சாப்பிட்டதும் பாபாய்க்கு வீரம் வருவதைப்போல போதை வஸ்தை சாப்பிடவுடன் அதிரடி காட்டுகிறார். காளிதாஸ் ஜெயராமன், செம்பன் வினோத், நரேன், ரமேஷ் திலக், காயத்ரி ஷங்கர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். திடீரென வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சூர்யா. அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் திரையில் விருந்து காத்திருக்கிறது.

கமல், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி மூவருமே நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் டஃப் கொடுத்தும், ஸ்கீரின் ஸ்பேஸ் குறித்து கவலைப்படாமல் நடித்திருக்கின்றனர். படம் தொடங்கியதும் எந்தவித சமரசமுமின்றி கதைக்குள் நுழைந்துவிடுகிறது. அது படத்துக்கு பலம் சேர்க்கிறது. படம் ஆக்‌ஷன் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டாலும், இடையிடையேயான சில சர்ப்ரைஸ் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, மொத்த படத்தையுமே தூக்கி நிறுத்துகிறது இன்டர்வல் ப்ளாக் சண்டைக்காட்சி. அது படமாக்கப்பட்ட விதமும், விறுவிறுப்பும் ரசிக்க வைக்கிறது. அந்த சிங்கிள் ஷார்ட் சண்டைக்காட்சியில் கேமராவை முன்னும் பின்னும் நகர்த்தி தெறிக்க விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ் கங்காதரன்.

போதைப்பொருட்கள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆயிரத்தி ஓராவது படமாக இந்தப் படம் இடம்பெற்றிருக்கிறது. பொறுமையாக தொடங்கும் திரைக்கதை விசாரணையால் வேகமெடுக்கிறது. இருப்பினும் முதல் பாதியின் நீளம், முழுப் படத்தையும் பார்த்த உணர்வை கொடுக்கிறது. படத்தில் துப்பாக்கியிலிருந்து தெறிக்கும் தோட்டாக்களுக்கு இணையாக ஒலிக்கிறது அனிருத்தின் பின்னணி இசை. துப்பாக்கியை லாக் செய்யும் சத்தத்தை வைத்தே பிண்ணியிருக்கும் இசை கவனம் பெறுகிறது. தியேட்டரில் சண்டை மற்றும் துப்பாக்கி சத்தம் வேற லேவல்....  

மொத்தத்தில் இந்த 'விக்ரம்' அதிரடி கலந்த திரில்லர்.... 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.