Yaanai Movie Review : 'யானை' படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?!

 Yaanai Movie Review : 'யானை' படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?! 



ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ராதிகா, பிரியா பவானி சங்கர், யோகிபாபு, சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'யானை'  

ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்திருந்த யானை திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம் வாங்க.......

ஊருக்குள் மிகவும் கௌரவமான குடும்பமாக வாழ்ந்து வருகிறது அருண் விஜயின் பி ஆர்.பி குடும்பம். இவருக்கு சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் என மூன்று அண்ணன்கள் உள்ளனர். மூவர் மீண்டும் அருண் விஜய் அன்பு அக்கறையும் வைத்திருந்தாலும் இவர்கள் அருண் விஜயை மாற்றான் தாய் வயித்து பிள்ளையாகவே பார்க்கின்றனர். ஆனால் அருண் விஜய் அண்ணன்கள் மீதும் அண்ணன் மகள் மீதும் பெரும் பாசம் காட்டுகிறார்.

அண்ணன் மகளின் ஒரு.... செயலுக்கு அருண் விஜய் மீது ஒரு பழி உண்டாகி அவரை வெளியே அனுப்புகின்றனர். மறுபக்கம் பி.ஆர்.வி குடும்பத்தின் மீது இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் வில்லன் லிங்கம் (ராமச்சந்திர ராஜு). பின் இறுதியில் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? வில்லன் பி.ஆர்.வி குடும்பத்தை என்ன செய்தார்? அருண்விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை.



இந்த படத்தில் பயங்கர மாஸ் என்ட்ரி கொடுத்து நடித்திருக்கிறார் அருண் விஜய். சண்டை , காதல், சென்டிமென்ட், பாசம் என அனைத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய். குறிப்பாக, அவர் சண்டைக்காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து கதாநாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

நடிகை ராதிகா தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்ணனாக வரும் சமுத்திரகனி வழக்கம்போல் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிரட்டியிருக்கிறார். வில்லனாக வந்து கடைசியில் அனைவரையும் மிரட்டி இருக்கிறார் நடிகர் ராமச்சந்திர ராஜா. இவர்களுடன் அம்மு அபிராமியின் நடிப்பும் படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. யோகி பாபு நகைச்சுவை அருமையாக இருக்கிறது. ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது.

                      குறைகள்: 

கதை புதிதாக இல்லை.. காமெடி சில இடங்களில் தேவையில்லை... பாடலுக்கு கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.... காதலர்கள் காட்சிக்கு முடிவு இல்லை....  

ஆனால் சண்டை காட்சிகள் அனல் பறக்கும் தெறி மாஸ்.... வசனம் மிரட்டுகிறது....

மொத்தத்தில் இந்த 'யானை' பாசகார பய.......   


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.