PMAY – எம்ப்பவரிங் இந்தியா விருதுகள் 2022!

PMAY – எம்ப்பவரிங் இந்தியா விருதுகள் 2022!
சென்னை: 

எளிய விலை வகையினத்தில் மிகச்சிறந்த இல்லங்களை உருவாக்கி வழங்குவதில் நவீன்ஸ் நிறுவனம் கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு சான்றாக தமிழ்நாட்டில் “கட்டுபடியாகக்கூடிய விலையில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் / குறைந்த வருவாய் பிரிவினருக்கான சிறந்த வீட்டுவசதி திட்டம்” (“The Best Affordable EWS/LIG Housing Project”) என்ற விருது நவீன்ஸ் ஸ்டார்வட் டவர்ஸ் 2.0 வீட்டுவசதி திட்டத்திற்கு 2022-ம் ஆண்டுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லியில் நடைபெற்ற PMAY – எம்ப்பவரிங் இந்தியா விருதுகள் 2022 என்ற நிகழ்வில் இவ்விருதை இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கௌஷல் கிஷோர், நவீன்’ஸ் ஹவுசிங் அண்டு பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கினார். தமிழ்நாட்டில் சாமான்ய மக்களுக்கும் சொந்தவீடு என்ற கனவை நிஜமாக்குவதற்கு நவீன்ஸ் எடுத்துவரும் சிறப்பான முயற்சிகளுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைப்பது இது இரண்டாவது முறையாகும் விருதுக்கான நிறுவனங்களை தேர்வு செய்ய நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழு மேற்கொண்ட கடுமையான பரிசீலணைக்குப் பிறகு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.  இத்துறையைச் சேர்ந்த பிரபல நிபுணர்கள் குழுவில் டெல்லி வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் திரு. உதய் பிரதாப் சிங், CPWD – ன் முன்னாள் தலைமை இயக்குனர் திரு. அபய் சின்ஹா, நகர்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் திரு. ஹித்தேஷ் வைத்யா, NICMAR -ன் தலைமை இயக்குனர் டாக்டர். மங்கேஷ் ஜி. கொர்கான்கர், HUDCO -ன் இயக்குனர் (கார்ப்பரேட் திட்டமிடல்) திரு. எம். நாகராஜ், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் மற்றும் முதுநிலை செயலாக்க துணைத்தலைவர் திரு. M.V. சதீஷ், BMTPC – ன் செயலாக்க இயக்குனர் டாக்டர். ஷைலேஷ் Kr. அகர்வால், அலுவாலியா கான்ட்ராக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் – ன் தலைமை இயக்க அதிகாரி திரு, அருண் சஹாய், எல் & டி இன்ஸ்டியூட் ஆஃப் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் – ன் டீன் திரு. V.T.C சேகர் ராவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

நவீன்’ஸ் ஹவுசிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஆர். குமார் இது தொடர்பாக கூறியதாவது:

"கட்டுமானப் பணியின் தரம் மீதும், லைஃப் ஸ்டைல் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பான இல்லங்களை உருவாக்குவதற்கு நவீன் ஹவுசிங் நிறுவனம், பிரபலமாக மக்களால் அறியப்படுகிறது.  வாடிக்கையாளருக்கு முதன்மை முக்கியத்துவம் தரும் பிராண்டாக பிரபலமடைந்திருக்கும் நவீன்ஸ் – ல், தங்களது நீண்டநாள் கனவான ஒரு இல்லத்தை வாங்குவதற்கு தங்களது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் முதலீடு செய்கின்ற ஒவ்வொரு குடும்பத்தின் விருப்பத்தையும், அதற்கான அவர்களது போராட்டத்தையும் நாங்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம்.  இதன் வழியாக, கட்டுபடியாகக்கூடிய மிதமான விலையில் அனைத்து முக்கிய வசதிகளோடு குறிப்பிடத்தக்க சொகுசு அம்சங்களையும் சேர்த்து வீடு வாங்குபவர்களுக்கு வழங்குகின்ற புதுமையான வீட்டுவசதி கட்டுமானத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நாங்கள் எப்போதும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.” “வீடு வாங்க விரும்பும் ஒவ்வொரு தனிநபரின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 என்பது, சென்னையில் நவீன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான வீட்டுவசதி வளாகமாகும்.  PMAY – எம்ப்பவரிங் இந்தியா அவார்ட்ஸ்  என்பதால், தமிழ்நாட்டின்  “கட்டுபடியாகக்கூடிய விலையில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் / குறைந்த வருவாய் பிரிவினருக்கான சிறந்த வீட்டுவசதி திட்டம்” (“The Best Affordable EWS/LIG Housing Project”) என்ற விருது, ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 என்ற எமது திட்டத்திற்கு வழங்கப்பட்டிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  சாமான்ய மக்களின் நலனுக்காக கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் தரமான இல்லங்களை உருவாக்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் தொடர்ச்சியான பொறுப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் இவ்விருது அங்கீகரித்திருக்கிறது.  தமிழ்நாட்டில் அதிகம் மதிக்கப்படுகின்ற, நேர்மை, வெளிப்படைத்தன்மை, நன்னெறி சார்ந்து இயங்கும் பிரபல ரியல் எஸ்டேட் பிராண்டாக அறியப்படும் நாங்கள், மக்களால் பெரிதும் விரும்பப்படும் குடியிருப்பு இல்ல பிராண்டாக நவீன்ஸ் – ஐ இன்னும் வலுவாக இவ்விருது நிலைநிறுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று டாக்டர். குமார் மேலும் கூறினார். சென்னை மாநகரில், மேடவாக்கத்தில் அமைந்துள்ள ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0, 9.58 ஏக்கர்கள் என்ற பரந்த நிலப்பரப்பில் 412 வீடுகளை கொண்டிருக்கின்ற ஒரு சிறப்பான குடியிருப்பு வளாகமாகும்.  ரூ 38 இலட்சம் என்ற விலையில் தொடங்குகின்ற 591 சதுரஅடியிலிருந்து, 1484 சதுரஅடி வரை வேறுபட்ட அளவுகளை கொண்டிருக்கின்ற 2 மற்றும் 3 BHK என்ற சமச்சீரான கலவையில் நவீன அடுக்குமாடி வீடுகளை இவ்வளாகம் கொண்டிருக்கிறது.  தரைத்தளம் + 14 தளங்களைக் கொண்டதாக இக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது.  

தொழில்நுட்ப ரீதியிலான நுண்ணறிவின் ஆதரவைக் கொண்ட இத்திட்டம், உயர் தொழில்நுட்பம் அடங்கிய சூப்பர் ஸ்மார்ட் இல்லங்களின் அற்புதமான வசதியை இங்கு இல்லங்களை வாங்குபவர்கள் அனுபவித்து மகிழ வகை செய்கிறது.  இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் பயோமெட்ரிக் PIN கட்டுப்பாடுள்ள கதவு அணுகுவசதி, ஸ்மார்ட்போன் டோர் லாக், விளக்கு மற்றும் மின்விசிறி கட்டுப்பாடு போன்ற ப்ரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  அத்துடன் 100 க்கும் கூடுதலான வசதியம்சங்களைக் கொண்டிருக்கும் இச்செயல்திட்டத்தில் 18500 சதுரஅடி பரப்பளவுள்ள சிறப்பான கிளப்ஹவுஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகரின் முக்கியமான அமைவிடங்களுக்கு எளிதில் சென்று வரும் போக்குவரத்து வசதியுடன் பேருந்து மற்றும் இரயில் நிலையங்களுக்கு மிக நெருக்கமாக ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 வளாகம் அமைந்திருக்கிறது.  புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்புப்பிரிவு மருத்துவமனைகள் மற்றும் மால்கள், தியேட்டர்கள், உணவகங்கள் போன்ற பல பொழுதுபோக்கு அமைவிடங்களும் இவ்வளாகத்திற்கு அருகில் அமைந்திருப்பது இதன் அமைவிடச் சிறப்பை இன்னும் உயர்த்துகிறது.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.