Kuzhali Movie Review: 'குழலி' திரைப்படத்தின் விமர்சனம்!
முக்குழி பிலிம்ஸ் சார்பில் கே.பி வேலு , ஜெயராமன், ராமச்சந்திரன் தயாரிப்பில் விக்னேஷ், ஆரா மகா , செந்தி, ஷாலினி நடிப்பில் சேரா கலையரசன் இயக்கி இருக்கும் படம் தான் 'குழலி'.
கதையின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.....
கிராமத்தில் உயர் சாதிப் பெண்ணுக்கும் (ஆரா) தாழ்த்தப்பட்ட சாதியிலேயே கொஞ்சம் பெரிய ஆளான ஒருவரின் மகனுக்கும் ( விக்னேஷ்) காதல்.
பல வருடங்களுக்கு முன்பு உயர் சாதி நபர் ஒருவன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்துக் கர்ப்பமாக்க , அந்தக் காதலை உயர் சாதி ஆட்கள் ஏற்காததோடு சம்மந்தப்பட்ட பெண்ணின் அப்பாவை நாயை விட்டுக் கடிக்க வைத்து அவமானப்படுத்தி விடுகிறார்கள்.
அந்த விசயத்தில் உயர்சாதி ஆட்களிடம் பேசி நியாயம் பெறப் போராடவில்லை என்று நாயகனின் அப்பா மீது சக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோபம். இந்த சூழலில் இந்தப் புதிய காதலைக் கண்டு பிடிக்கும் அந்த தாழ்த்தப்பட்ட சமூக சக நபர் ஒருவன் , பெண்ணின் தாய்மாமாவிடம் போய் , ”அப்போ ஏமாந்துட்டோம் இந்த முறை விட மாட்டோம் .
இந்தக் காதல் நிறைவேற வேண்டும்” என்று கொடி பிடிக்க, விஷயம் பெண்ணின் அம்மாவுக்கும் உறவுகளுக்கும் சாதிக்காரர்களுக்கும் தெரிய வர, மருத்துவராகும் கனவோடு காதலித்த அந்தக் காதல் ஜோடி சேர்ந்தார்களா? முடிவில் காதல் ஜெயித்ததா? சாதி ஜெயித்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை.....
ஆரா, செந்தி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். உதயகுமாரின் பாடல் இசையும் பின்னணி இசையும் அருமை . சமீரின் ஒளிப்பதிபும் சிறப்பு . கிராமியப் பழக்க வழக்கக் கலாச்சாரங்களை காட்சிகளில் இணைத்து இருக்கும் விதம் படத்திற்கு அழகு. ஆனால் சாதியை அடிப்படையாக கொண்டு பழைய கதையையே மீண்டும் எடுத்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில் இந்த 'குழலி' சாதி வெறியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்.....
கருத்துரையிடுக