இந்திய – ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (ECTA) கீழ் ஏற்றுமதி செயல்பாடுகள்!
சென்னை:
சமீபத்தில் கையெழுத்தாகி செயல்பாட்டிற்கு வந்த இந்திய – ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தம் (ECTA), இன்று முதல் அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்திலிருந்து தனது செயல்பாட்டைத் தொடங்கியிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் ஏறக்குறைய 90% இத்துறைமுக முனையத்திலிருந்து மேற்கொள்ளப்படும். ECTA – ன் கீழ், ஆஸ்திரேலியாவிற்கு செய்யப்படும் ஏற்றுமதி பொருட்கள் / சரக்குகளுக்கு 100% முன்னுரிமை அணுகுவசதியினால் இந்தியா பயன்பெறும்.
ECTA – ன் கீழ், தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளை அனுப்பி வைக்கும் விழா, அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தில் இன்று நடைபெற்றது. FIEO – ன் முன்னாள் தலைவர் திரு. இஸ்ரார் அஹமது, சென்னை, ITS -ன் வெளிநாட்டு வர்த்தக இணை தலைமை இயக்குனர் திரு. BN விஸ்வாஸ், சென்னை, சுங்கத்துறையின் கூடுதல் ஆணையர் திரு. பாலாஜி IRS, செயிண்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் திரு. AR. உன்னிகிருஷ்ணன், அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தின் தலைவர் திரு. ராம்டே கராஞ்சியா, அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தின் விற்பனை பிரிவு தலைவர் திரு. விவேக் நாயர் மற்றும் DGFT, FIEO மற்றும் எண்ணூர் துறைமுகத்தின் முதுநிலை அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சரக்குகளை அனுப்பும் முன்னணி ஏற்றுமதியாளர்கள் முன்னிலையில் ஏற்றுமதி சரக்குகளை அனுப்பும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவுடன் அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் 17-வது பெரிய பார்ட்னராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் 9-வது பெரிய வர்த்தக பார்ட்னராக இந்தியா இருக்கிறது. சரக்குப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2021-ம் ஆண்டில் $27.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதிகள், கடந்த பல ஆண்டுகளில் கனிசமாக அதிகரித்திருந்தாலும் கூட, ECTA – ன் கீழ் இதில் அதிகரித்த முன்னேற்றத்திற்கு சிறப்பான வாய்ப்பு இருக்கிறது. ECTA -ன் கீழ், ஆஸ்திரேலிய சந்தையில் இதுவரை நுழைந்திடாத பகுதிகளுக்கு முன்னுரிமையுடன் கூடிய அணுகுவசதியை பெறுகின்ற நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் இப்போது இருக்கின்றனர்.
2022 டிசம்பர் 29-ம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் ECTA, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பாக, குறு – சிறு – நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய சந்தையில் சிறப்பாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இந்நிறுவனங்கள் பயன்படுத்தி, பலன்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதே இதற்கு காரணம். ஆஸ்திரேலியாவின் இறக்குமதியின் அதிக பங்கினைப் பெறுவதற்கு இப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள். மருந்து தயாரிப்புகள், ஆபரணங்கள், வாகனங்கள் மற்றும் வேளாண் தயாரிப்புகள் ஆகியவற்றில் இந்தியாவின் வலுவான சாதக அம்சங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அரிசி, ஜவுளிகள் மற்றும் ஆடைகள், கைத்தறி தயாரிப்புகள், லெதர் பொருட்கள், ஆர்கானிக் வேதிப்பொருட்கள், பொறியியல் மற்றும் ஃபுளோட் கிளாஸ்கள் உட்பட கட்டுமானப் பொருட்கள், மசாலா நறுமணப் பொருட்கள் ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும்.
2022 டிசம்பர் 29 முதல், செயல்பாட்டிற்கு வரும் வகையில் ECTA – ஐ வெற்றிகரமாக அமலாக்கம் செய்திருப்பதற்காக இந்திய அரசை பாராட்டிய FIEO அமைப்பின் தலைவர் டாக்டர். சக்திவேல், கைத்தறி துறைக்கான நல்ல வாய்ப்புகளோடு, ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில் மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறும் என்று குறிப்பிட்டார். குறைந்த காலஅளவிற்குள், தமிழ்நாட்டில் மிகப்பெரிய சந்தைப் பங்கினை பெறக்கூடிய பிற துறைகளுள் ஜெம்ஸ் (நவரத்தின கற்கள்) மற்றும் ஆபரணங்கள், லெதர் மற்றும் லெதர் அல்லாத காலணிகள் பிரிவு, ஆட்டோ பாகங்கள் மற்றும் பொறியியல் தயாரிப்புகள் ஆகியவையும் இடம்பெறும். நிதியாண்டு 21-22 – ன் போது, தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதி மதிப்பு 384 மில்லியன் யுஎஸ் டாலராக நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலஅளவில் தமிழ்நாட்டின் ஏற்றுமதியானது, ஏற்கனவே 322 மில்லியன் யு.எஸ். டாலர் என்பதை எட்டியிருக்கிறது. எனவே, இந்த நிதியாண்டின்போது மொத்தத்தில் 500 மில்லியன் யுஎஸ் டாலர் என்ற அளவை இது கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களுக்கு குறைவான செலவில் டெலிவரிகளை செய்வதை ஏதுவாக்க தங்களது சப்ளை செயின் திறமைகளை மேலும் திறம்பட உயர்த்துமாறு ஏற்றுமதியாளர்களை டாக்டர். சக்திவேல் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். தென்னிந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவிற்கு செய்யப்படும் ஏற்றுமதிக்கு ஒரு பிரத்யேக ஏற்றுமதி சரக்கு முனையமாக நேர்த்தியான உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்ற அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். ஆஸ்திரேலிய சந்தையில் இந்திய தயாரிப்புகளுக்கு சீன நாடு முன்வைக்கும் கடும் போட்டிக்கான வாய்ப்பை சுட்டிக்காட்டிய டாக்டர். சக்திவேல், சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா செய்யும் இறக்குமதியின் அளவு 27% ஆக இருக்கையில், இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 2.4% என மிக குறைவான நிலையில் இருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டினார். ஏற்றுமதி செய்யப்படும் தயாரிப்புகளின் அனைத்து அம்சங்களிலும் போட்டியிடக்கூடிய திறனை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் இதனை திறன்மிக்க உத்தியுடன் கையாளுமாறு ஏற்றுமதியாளர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
ECTA-ன் கீழ், ஆஸ்திரேலியாவில் HSN குறியீட்டு ரீதியாக இறக்குமதி வரி விகிதங்கள், www.indiantradeportal.in என்ற இணையதளத்தில் ஏற்கனவே நிகழ்நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இறக்குமதி வரி சலுகைகளைப் பெறுவதற்கு சரக்குகளின் தோற்ற கட்டளை விதிகள், தேவைப்படும் தரநிலைகள் மற்றும் ஆஸ்திரேலிய சந்தைக்காக தேவைப்படும் சான்றாக்க தேவைப்பாடுகள் ஆகியவை இத்தகவல்களில் இடம்பெற்றுள்ளன.
அதானி எண்ணூர் கண்டெய்னர் டெர்மினல் (AECT) என்பது, சென்னைக்கு வடக்கே 30 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் மிக நவீன பாக்ஸ் டெர்மினலாகும். முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தைக் கொண்டிருக்கும் AECT, சிரமமில்லாத சரக்குப் போக்குவரத்திற்கு நெருக்கடியில்லாத அணுகுவசதி சாலைகளையும் மற்றும் பெங்களூருவிற்கு ஆன்-டாக் ரயில் சைடிங் சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் துறைமுகத்து பின்புற பிராந்தியத்திலிருந்து சரக்குகள் விரைவாக போக்குவரத்து செய்யப்படுவதை இது ஏதுவாக்குகிறது. சென்னையின் முதன்மையான பின்னிலப் பகுதியோடும் மற்றும் 4 தேசிய நெடுஞ்சாலைகளோடும் இதன் அனைத்து கண்டெய்னர் ஃபிரெய்ட் ஸ்டேஷன்களும் (CFSs) நன்கு இணைக்கப்பட்டிருக்கின்றன.
கருத்துரையிடுக