யார் இந்த 'BIG ஸ்டார்' பிரபஞ்சன்?!
தமிழ்த் திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் ஒருவர்' BIG ஸ்டார் 'என்கிற பட்டத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ' 90'ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருடன் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஜெர்மன் விஜய் இசை அமைக்கிறார். பா. விஜய் எழுதிய பாடல் வரிகளுக்கு ஹரிஹரன் ஹரிணி, பாம்பே ஜெயஸ்ரீ , ஜாசி கிப்ட், திப்பு போன்ற முன்னணிக்குரல்களில் பாடல்கள் உருவாகின்றன.
இந்தப் படத்தில், மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் நடிக்கிறார். '90 கிட்ஸ் பரிதாபங்கள் 'படம் சொல்லும் கதை என்ன?படம் எதைப் பற்றிப் பேசுகிறது என்பது விரைவில் தெரியும்.
'திட்டிவாசல்' படத்தின் இயக்குநர் மு.பிரதாப் முரளி ,ரிவான் என்னும் புனைபெயரில் இயக்கும் இப்படத்தை N & N சினிமாஸ் சார்பில் கோவை சசிகுமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை நீலகிரி மற்றும் சென்னையில் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
கருத்துரையிடுக