'நான் கடவுள் இல்லை' திரை விமர்சனம்

 'நான் கடவுள் இல்லை' திரை விமர்சனம் 



எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, பருத்திவீரன் சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் 'நான் கடவுள் இல்லை'.

வீச்சருவாள் வீரப்பனான சரவணன் ஜெயிலுக்கு போக காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, வழக்கறிஞர் நீதிபதி உள்ளிட்டோரை பழிவாங்க வேண்டும் என உறுதியாக இருக்க ஜெயிலில் இருந்து தப்பித்து வந்த சரவணன் நீதிபதி வழக்கறிஞர் உள்ளிட்டவர்களை கொன்று விட்டு சமுத்திரகனியை பழிவாங்க துடிக்கிறார். ஒரு கட்டத்தில் சமுத்திரகனியின் மகளை கடத்தி விடுகிறார்.

மறுபக்கம் எஸ்.ஏ சந்திரசேகர் கடவுள் போல ஏழை மாணவி மற்றும்  எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். யார் கடிதத்தின் மூலம் என்ன கேட்டாலும் அதை சந்திரசேகர் நிறைவேற்றி வரும் நிலையில் சமுத்திரகனியின் மகள் வீச்சருவாள் வீரப்பனான சரவணன் உயிரை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறாள்.

இதனால் அடுத்து நடந்தது என்ன? சமுத்திரகனிக்கும் சரவணனுக்கும் இடையேயான யுத்தத்தில் வென்றது யார்? இந்த பிரச்சனையை எஸ்.ஏ சந்திரசேகர் தீர்த்தாரா? இல்லையா? சமுத்திரகனியின் மகளுக்கு என்ன ஆனது? என்பது தான் இந்த படத்தின் மீதி கதை....

பருத்திவீரன் சரவணன் வில்லனாக கலக்கி இருக்கிறார். சாக்ஷி அகர்வால், இனியா உள்ளிட்டோர் அவர்களின் கதாபாத்திரங்களை அழகாக செய்து கொடுத்துள்ளனர். எஸ்.ஏ சந்திரசேகர் ஒரு கடவுள் அவதாரம் போல படத்தில் வலம் வருகிறார்.படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அழகு சேர்த்துள்ளது. நல்ல போலீஸ்காரர்களுக்கு ஏற்ற படமாக உருவாக்கியதற்கு பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் இந்த  'நான் கடவுள் இல்லை'  வேகம்.... 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.