'தலைக்கூத்தல்' திரைவிமர்சனம்
ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தலைக்கூத்தல்'
தனியார் நிறுவன செக்யூரிட்டி சமுத்திரக்கனி. அவருடைய மனைவி வசுந்தரா. இந்த தம்பதிக்கு ஒரு மகள். இவர்களுடன் மரண படுக்கையில் சமுத்திரக்கனியின் வயதான அப்பா. அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சமுத்திரக்கனியின் தந்தை எல்லோருக்கும் பாரமாக தோன்றுகிறார். அந்த கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்கிறார்கள்.
அதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். ஆனால் பாசத் தந்தையை அநியாயமாக கொலை செய்வதற்கு சம்மதிக்காமல் துடிக்கிறார் சமுத்திரக்கனி. மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தந்தைக்காக செலவு செய்கிறார். சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார்.
ஏற்கனவே அப்பாவை காரணம் காட்டி சமுத்திரக்கனியிடம் வம்பு இழுத்த வசுந்தரா கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும் மேலும் சண்டை போடுகிறார். சமுத்திரக்கனியால் மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த முடிந்ததா? உயிர் ஊசலாடும் சமுத்திரக்கனியின் அப்பாவின் உயிர் தப்பித்ததா? என்பது மீதி கதை.
மொத்தத்தில் இந்த "தலைக்கூத்தல்" குடும்ப ரகளை....
கருத்துரையிடுக