விக்ரம் பிரபு நடித்த "60 வயது மாநிறம்"

விக்ரம் பிரபு நடித்த "60 வயது மாநிறம்
வயகாம்18 இன் தமிழ் சேனலான கலர்ஸ் தமிழ், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5, 2023 அன்று மதியம் 1:30 மணிக்கு விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள "60 வயது மாநிறம்"  திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை ஒளிபரப்ப உள்ளது. உணர்வுப் பூர்வமாக ஈர்க்கும் இந்த திரைப்படத்தை மொழி மற்றும் அபியும் நானும் புகழ் ராதா மோகன் இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு  இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். உணர்ச்சி நிரம்பிய அழுத்தமான இக்கதையை உங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ வரும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5, 2023 மதியம் 1:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

உறவுகள் மற்றும் காதல் குறித்து ஆழமான குடும்பப் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குனர் திரு. ராதா மோகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் பரத் ரெட்டி, இளங்கோ குமரவேல் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். கன்னடத் திரைப்படமான கோதி பன்னா சாதாரண மைகட்டு-வின் தமிழ் மறுவாக்கமே 60 வயது மாநிறம் திரைப்படம் ஆகும். மூத்த குடிமகன் கதாப்பாத்திரமான கோவிந்தராஜனை (பிரகாஷ் ராஜ்) மையமாகக் கொண்டு அவர் அல்சைமர் நோய் பாதிப்பால் நடக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாட்டை  எதார்த்தமாக இந்த  திரைப்படம் காட்டி இருக்கிறது. இத்திரைப்படமானது 60 வயதான அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தனது அப்பா கோவிந்தராஜனை இருவரின் உதவியுடன் கண்டுபிடிக்க துடிக்கும் மகனை (நடிகர் விக்ரம் பிரபு) சுற்றி நகர்கிறது. 

காணாமல் போன தன் தந்தையை கண்டுபிடிக்க அர்ச்சனா என்ற பெண் மருத்துவருடன் தேடலில் இறங்குகிறார் அவரது மகன். சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு கொலைகாரனிடம் (சமுத்திரகனி) சிக்கிக் கொள்கிற தனது தந்தையை விக்ரம் பிரபு எப்படி மீட்டு வருகிறார் எனும் இத்திரைப்படத்தின் மீதமுள்ள கதை பார்வையாளர்களை நாற்காலியின் விழும்பிற்கு கொண்டுசெல்லும்  வகையில் சுவாரஸ்யமாக இருக்கும். இது குறித்து இயக்குனர் ராதா மோகன் பேசுகையில், “பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, போன்ற அனுபவமிக்க கலைஞர்களுடன் பணியாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

முக்கியமாக இசைஞானி இளையராஜா எனது இந்த திரைப்படத்துக்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படமானது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவைப் பற்றிய படம் மற்றும் கதையின் உணர்ச்சி வெளிப்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. உலக தொலைக்காட்சி பிரீமியர் மூலம் கலர்ஸ் தமிழில் "60 வயது மாநிறம்" திரைப்படத்தை பார்வையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் உணர்ச்சி கலந்த அழகான குடும்ப பொழுதுபோக்கை ரசிப்பதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிப்ரவரி 05, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணிக்கு 60 வயது மாநிறம் திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் உங்கள் குடும்பத்தினருடன் கண்டு மகிழுங்கள்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.