'வாத்தி' படம் எப்படி இருக்கு?!

'வாத்தி' படம் எப்படி இருக்கு?! யக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் "வாத்தி"  

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.... 

90களின் இறுதியில் ஆசிரியர்கள் இல்லாததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்த அவல நிலையை மாற்றியமைக்க தனியார் பள்ளிகள் சார்பில் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். அதன்படி திருப்பதி எஜுகேஷனல் இன்ஸ்டியூட்டிலிருந்து பாலமுருகன் (தனுஷ்) என்ற ஆசிரியர் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சோழபுரம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செல்லும் பாலமுருகனுக்கு பல்வேறு அதிர்ச்சிகளும், சவால்களும் அங்கே காத்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து பாலமுருகன் அங்கிருக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை எப்படி மேம்படுத்தினார் என்பதே கதை.....

தனியார்மயத்துடன் வியாபாராகும் கல்வி, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் அலட்சியப்போக்கு, இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் படிப்பு என கல்வியின் பல்வேறு பக்கங்களை புரட்டுகிறது படம். பெண்கல்வியின் அவசியம், சாதிப் பாகுபாடு தொடர்பான உரையாடல் காட்சியும் அழுத்தம் கூட்டுகிறது. படத்தில் TNPCEE தேர்வு பற்றிக் காட்டப்படுகிறது. 

படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் தனுஷ். பாலாவாகவே வாழ்ந்திருக்கிறார். மாணர்களை படிக்க வைக்க தனுஷ் சொல்லும் புதுப் புது ஐடியாக்கள் ரசிக்கும்படி இருக்கிறது. சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று தனுஷ் பேசும் வசனங்கள் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

மொத்தத்தில் இந்த வாத்தி மறைமுகமாக பாடம் நடத்துகிறார்...... 


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.