D3 Movie Review- D3 திரைவிமர்சனம்

D3 Movie Review- D3 திரைவிமர்சனம் 





படத்தின் நடிப்புக் கலைஞர்கள்


பிரஜின்- விக்ரம்

வித்யா பிரதீப் -மாயா

 சார்லி - எட்டு மணி 

காயத்ரி யுவராஜ்- மாலினி

ஆனந்தி - ஜெனிபர்


தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயக்குநர் : பாலாஜி

ஒளிப்பதிவு : மணிகண்டன் பிகே 

எடிட்டிங் : ராஜா 

இசை : ஸ்ரீஜித் எடவானா

தயாரிப்பாளர் : மனோஜ் 

தயாரிப்பு நிறுவனம்

பீமாஸ் என்டர்டெயின்மென்ட்

BMASS ENTERTAINMENT

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
  
தென்காசி மாவட்டத்தில் உள்ள D3 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பிரஜின், ஒரு பெண் வீட்டில் தனியாக இருக்கிறார் அப்போது அவருக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து போன் வருகிறது அதனை எடுத்து காதில் வைத்து , ஒரு மாதிரி நடந்து வெளியே செல்கிறார். அப்போது ஒரு லாரி அவர் மீது மோதி அங்கேயே இறந்துவிடுறார். அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2021 ம் ஆண்டு அங்கு உள்ள D3 போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு பதவி ஏற்கிறார். கதையின் நாயகன் விக்ரம் , அப்போது 2018 ம் ஆண்டு நடந்த மாதிரியே சிலசம்பவங்கள் நடக்கிறது. இந்த செயலுக்கு பின்னணி என்ன? குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதி கதை…




நாயகன் உடல்மொழி மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பவர் தனது நடிப்பு மூலம் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப்புக்கு வேலை குறைவாக இருந்தாலும், அதை நிறைவாக செய்து கவனம் பெறுகிறார். ரவுடியாக நடித்திருப்பவர், சார்லி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். 

மணிகண்டன்.பி.கே-வின் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் எடவானாவின் இசையும் கதைக்கு ஏற்ப பயணிப்பதோடு, காட்சிகளுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது. மர்மான கொலைகள் மற்றும் கடத்தல்கள் சம்பவங்களை காட்சிப்படுத்திய விதம் ஆர்வம். ஆனால் பாடல் மற்றும் சில காட்சிகள் வேகத்தை குறைத்துள்ளது.

மொத்தத்தில் இந்த D3 புதிய கிரைம் முயற்சி..... 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.