'குடிமகான்' திரைவிமர்சனம்

'குடிமகான்' திரைவிமர்சனம் 


நடிகர்: விஜய் சிவன்

 நடிகை: சாந்தினி  

டைரக்ஷன்: பிரகாஷ் 

இசை: தனுஜ் மேனன் 

ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்

வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வேலை பார்ப்பவர் விஜய் சிவன். இவரது மனைவி சாந்தினி. தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி. ஒரு கட்டத்தில் விஜய் சிவன் குளிர்பானம் குடித்தாலே போதை ஏறும் விநோத நோயில் சிக்குகிறார். 

ஒரு நாள் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் போது தானாகவே போதை ஏறி மெஷினில் 100 ரூபாய் வைப்பதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை வைத்து விடுகிறார். அந்த பணம் வாடிக்கையாளர்கள் கைக்கு போய்விடுகிறது. இதனால் விஜய் சிவன் வேலை பறிபோகிறது. 

பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேடி அலைகிறார். அவருடைய முயற்சியில் என்ன மாதிரியான கலாட்டா நடக்கிறது. பணம் கிடைத்ததா? இல்லையா?  என்பது மீதி கதை.....

தனுஜ் மேனன் இசையில் 'கொக்கு கொக்கு பற பற' பாடல் துள்ளல் ரகம். மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு படத்தை சுவாரசியப்படுத்த உதவியிருக்கிறது. சாந்தினி குடும்ப தலைவி வேடத்தில் உணர்ச்சிகளை மொத்தமாக கொட்டி கலக்கி இருக்கிறார். குடிகார தாத்தாவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி முட்டையை உடைத்து குடிப்பது, பேரக்குழந்தையுடன் டான்ஸ் ஆடுவதும், இரண்டாம் திருமணம் செய்வது என அமர்க்களம் பண்ணியிருக்கிறார். ஆனால் சில காட்சிகள் லாஜிக் இல்லாமல் உள்ளது.

மொத்தத்தில் இந்த 'குடிமகான்' போதை சிரிப்பு......  

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.