ரேசர் திரைப்படத்தின் திரைவிமர்சனம்!

ரேசர் திரைப்படத்தின் திரைவிமர்சனம்!


Casting : Akil santhosh, Lavanya, Aaru Bala, Subramanian, Parvathy, Sarath, Nirmal, Sathish, Arvind, Anees

Directed By : Satz Rex


Music By : Barath


Produced By : Hustler’s Entertainment - Kartik Jayas and Redal media works - Santhosh Krishnamurthy


PRO: Velu


சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:


நாயகன் அகில் சந்தோஷுக்கு சிறு வயது முதலே பைக் மற்றும் பைக் ரேஸ் மீது ஆர்வம் ஏற்படுகிறது. அதையடுத்து தான் ஒரு பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் அவருக்கு குடும்பத்தில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காமல் போகிறது. இருப்பினும் தனது லட்சியத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும், என்று பயணிப்பவர் தான் நினைத்தது போல் பைக் ரேசர் ஆனாரா? இல்லையா? என்பது தான் ’ரேசர்’ படத்தின் கதை....


நாயகனாக நடித்திருக்கும் அகில் சந்தோஷ் முதல் படம் போல் இல்லாமல் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். தான் ஆசைப்பட்டதை தனது தந்தையிடம் கேட்டு அடம் பிடிப்பது, பிறகு அது கிடைக்காத பட்சத்தில் தன்னை சமாதனப்படுத்திக் கொண்டு பயணிப்பது என பக்கத்து வீட்டு பையன் போல் மிக இயல்பாக வலம் வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, குறைவான காட்சிகள் வந்தாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். பைக் மெக்கானிக்காக நடித்திருக்கும் ஆறு பாலா, லட்சியத்தோடு பயணித்து அதில் வெற்றி பெற முடியாமல் தவிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நடித்திருப்பதோடு, அவர்களுக்கான நம்பிக்கையாகவும் ஜொலிக்கிறார். 


நாயகனின் தந்தை வேடத்தில் நடித்திருக்கும் மூர்த்தியின் வேடம் ஹீரோவுக்கு நிகராக கவனம் பெறுகிறது. வீட்டுக்கு ஒத்த பிள்ளையாக இருந்தாலும்,  அவனது ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், பிறகு மகனின் ஆசையை புரிந்துக்கொண்டு நிறைவேற்றுவது என்று நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் சரத், நிர்மல் மற்றும் சதீஷ் ஆகியோரின் கதாபாத்திரமும், நடிப்பும் கவனம் பெறும்படி இருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் அரவிந்த், நாயகனின் பயிற்சியாளராக நடித்திருக்கும் அனீஷ் மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் பார்வதி என அனைவரும் தங்கள் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். 


ஒளிப்பதிவாளர் பிரபாகர் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார் என்பதை விட, பட்ஜெட்டுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோரின் விருப்பம், பணப் பற்றாக்குறை என சிலபல காரணங்களால் கனவுகள் நசுக்கப்படும் இளைய தலைமுறையின் வேதனையை எளிமையான திரைமொழியில் காட்சிப்படுத்தியிருப்பதற்காக இயக்குநருக்கு பாராட்டு. 


ஆனால் திரைக்கதையில் கூடுதல் விறுவிறுப்பும் கமர்ஷியல் அம்சங்களும் சேர்த்திருக்கலாம்.


மொத்தத்தில் இந்த ரேசர் ரேஸ் ஜெயிக்கும்....

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.