'ருத்ரன்' திரை விமர்சனம்!
ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'ருத்ரன்'.
குடும்பப் பொறுப்பைக் கவனித்துக்கொள்ளும் அம்மாவின் (பூர்ணிமா பாக்யராஜ்) செல்லப் பிள்ளை ருத்ரன் (ராகவா லாரன்ஸ்). போக்குவரத்து நிறுவனம் நடத்தும் அப்பாவாக (நாசர்), மருத்துவமனையில் பணியாற்றும் லேப் ஊழியராக அனன்யா (பிரியா பவானி சங்கர்), மாஸ் வில்லனாக (சரத்குமார்) பூமி.
தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன். தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார். இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அது என்னவென்றால் வருமானத்தை பெருக்க தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல் நண்பனின் துரோகத்தை தாங்க முடியாமல் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடுகிறார். தந்தையின் டிராவல்ஸ் நிறுவனத்தை விற்று 3 கோடி ரூபாய்யை முதலில் கொடுக்கிறார் ருத்ரன். பின் மீதமுள்ள 4 கோடி கடனை அடைக்க அதிக சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார். 6 வருடங்களுக்கு பின், சென்னைக்கு மீண்டும் வருவதற்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் ருத்ரனின் தாய் மரணமடைகிறார். திடீரென்று மனைவி பிரியா பவானி ஷங்கர் காணாமல் போகிறார். ஹீரோ, அப்பா வாங்கிய கடனை அடைத்தாரா? அம்மாவின் இறப்பு எப்படி நடந்தது? மனைவிக்கு என்ன ஆனது? இதை வில்லனுடன் மோதி எப்படி கண்டு பிடிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை......
மனைவியாக வரும் பிரியா பவானி ஷங்கர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமாரின் நடிப்பு மிரட்டல். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல் வெறித்தனமாக இருந்தது. ஒளிப்பதிவு கலர்ஃபுல். எடிட்டிங் ஓகே. ஸ்டண்ட் இன்னும் கூட மசாலாவை குறைத்திருக்கலாம். வில்லன் பூமி எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என்ற காரணத்தில் கொஞ்சம் புதுமை இருக்கிறதே தவிர, படத்தில் லாஜிக் இல்லை. பழைய கதையே மீண்டும் வருவதால் சற்று தோய்வு ஏற்படுகிறது.
மொத்தத்தில் இந்த "ருத்ரன்" அடிதடி ஆட்டம்....
கருத்துரையிடுக