'சாகுந்தலம்' படம் எப்படி இருக்கு?!

'சாகுந்தலம்' படம் எப்படி இருக்கு?!

 


குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் தான் "சாகுந்தலம்". இப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹாவும் இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். மணிசர்மா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படமாக இதனை 3டியில் வெளியிட்டுள்ளனர். சாகுந்தலம் திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தெலுங்கில் உருவான சாகுந்தலம் திரைப்படத்தை தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்துள்ளனர். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்....

ரிஷி ஆஸ்ரமம் இருக்கும் காட்டு பகுதியில் ஆதரவற்ற குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்கிறது. அந்த குழந்தையை கண்டெடுக்கும் கண்வ மகரிஷி குழந்தைக்கு சாகுந்தலா ( சமந்தா) என பெயரிட்டு தனது சொந்த மகளைப் போல் வளர்க்கிறார். சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சாகுந்தலாவும் துஷ்யந்தனை காதலிக்கிறாள். இருவரும் யாருக்கும் தெரியாமல் மணமுடித்துக்கொள்ள, விரைவில் வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறி துஷ்யந்தன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான். வாக்களித்தபடி துஷ்யந்தன் வந்தாரா? இல்லையா? சாகுந்தலாவின் காதல் என்னவானது? அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை... 

படத்தின் முதல் அரை மணி நேரம் காட்டு விலங்குகளின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் நேஷனல் ஜாக்ரஃபிக் சேனலை பெரிய திரையில் பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அழகான இன்ட்ரோவுடன் 3டி காட்சிகளில் அறிமுகமாகிறார் சமந்தா. முதல் பாடலில் காதல் மலர, இரண்டாம் பாடலில் சமந்தா கர்ப்பம் தரிக்க, மூன்றாம் பாடலில் பிரிவு நேர்கிறது. இறுதிப்பாடலில் பிரிந்த உள்ளங்களின் இணைவு காட்சி ஓகே.   ‘காதல் காவியம்’ என தொடக்கத்திலேயே அடைமொழியிடப்பட்ட படத்தில் சமந்தாவுக்கும் நாயகன் தேவ் மோகனுக்கும் இடையிலான காட்சியில் துளியும் சுவாரஸ்யமில்லை. சம்பந்தமேயில்லாமல் திடீரென காட்டப்படும் தேவலோகம், நீண்டு சோதிக்கும் புராண பின் கதைகள் பலவீனம்.

மொத்தத்தில் இந்த "சாகுந்தலம்" சிறந்த சீரியல் தளம்..... 


Shaakuntalam Movie, Shaakuntalam Movie Reviews

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.