பெல் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் ஸ்ரீதர். தற்போது இவர் முதன் முதல் கதாநாயகனாக தற்போது நடித்த படம் பெல். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் புவன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் தயாரித்து இருக்கிறார். பழந்தமிழர் பெருமைகளை பற்றியும், பழந்தமிழ் மருத்துவ முறைகளை பற்றியும் பேசும் படமாக பெல் படம் இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் சிங்கவனம் என்ற காட்டில் மக்கள் வசித்து வருகிறார்கள். திடீரென்று அங்கு வசிக்கும் மக்கள் அடுத்தடுத்து இறந்து கொண்டே இருக்கிறார்கள். அப்போது படத்தின் கதாநாயகன் பெல்லும் இருக்கிறார்கள். நண்பன் மட்டும் உயிரோடு இருக்கிறார்கள். இதனை போலீசார் விசாரிக்கிறார்கள். இன்னொரு பக்கம், குரு சோமசுந்தரம் ஆரண்ய ஆர்கானிக் பார்ம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பெல்லிடம் நிசம்பசூரிணி என்ற மூலிகையை எடுத்து வர சொல்கிறார்.
இறுதியில் சிங்கவனம் காட்டில் மக்கள் எப்படி இறந்தார்கள்? குரு சோமசுந்தரம் எதற்காக அந்த மூலிகையை கேட்டார்? இதற்கு பின்னால் இருக்கும் பின்னணி என்ன? பெல்லும் அவருடைய இருக்கும் நண்பர் எப்படி உயிர் பிழைத்தார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தின் மூலம் நடன இயக்குனர் ஸ்ரீதருக்குள் நடிகன் ஒளிந்திருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பார்வையற்றவர் வேடத்தில் அவர் வெளிப்படுத்தி இருக்கும் உணர்வுகள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறது.
குரு சோமசுந்தரம் நடிப்பு பிரமாதம் வில்லன் கதாபாத்திரம் கதைக்கேற்ப கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்.
ஸ்ரீதரின் கற்பனை உருவத்தில் வரும் மறைந்த நடிகர் நித்திஷ் வீரா தன்னுடைய நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை தொடர்ந்து நாயகியாக வரும் துர்காவும் இவரை கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலை படத்தின் கதைக்களமாக இருக்கிறது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. ஆனால், பாடல்கள் சுமார் தான். சித்தர்கள் பாதுகாத்த மூலிகை வியாபாரம் செய்து பணமாக்கும் கதையை மையமாக கொண்டு இயக்குனர் கொடுத்திருக்கிறார்.
ஆனால், முழுமையான திரைகதை இன்னும் கொஞ்சம் புதுமையும் சுவாரசியத்தையும் கொடுத்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நல்ல சிந்தனையாக இருந்தாலும் நடிகர்களின் நடிப்பு, பட்ஜெட், ஆகிய அனைத்திலும் இயக்குனர் கவனம் செலுத்தி இருந்தால் இந்த படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் சென்றடைந்திருக்கும் தமிழர் பெருமையை சொல்லும் இந்தப் படம்.
மொத்தத்தில் இந்த பெல் சத்தம் ஒலிக்கும்.....
கருத்துரையிடுக