தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்



மதுரை: 

வருகின்ற 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரெயில்வேயின் சார்பில் தாம்பரம் - திருநெல்வேலி - தாம்பரம் இடையே இருமார்க்கமாக சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வருகின்ற 11-ந்தேதி (06051) தாம்பரத்திலிருந்து சிறப்பு விரைவு ரெயில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணியளவில் திருநெல்வேலியை சென்றடையும். அதேபோல (06052) திருநெல்வேலியில் இருந்து 12-ந்தேதி மாலை 5.50 மணி அளவில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.

இதில் இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி உடைய பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.