LEO REVIEW : 'லியோ' படம் எப்படி இருக்கு?!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், பிர்யா ஆனந்த், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், மடோனா செபஸ்டியன் என இப்படத்தில் பட்டாளமே நடித்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு காஃபி ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் பார்த்திபன் எனும் விஜய்க்கு மிஷ்கினின் கும்பலுடன் மோதல் வருகிறது. அதில் பார்த்தியால் அக்கும்பல் கொல்லப்பட அந்த செய்தி மூலம் பார்த்தியை தெலுங்கானாவில் இருக்கும் போதைப் பொருள் உற்பத்தி கும்பலான தாஸ் அண்ட் கோ அறிகின்றனர். பார்த்தியைத் தேடி தாஸ் (சஞ்சய் தத்) கும்பல் இமாச்சல் பிரதேசம் செல்கிறது. எதற்காக தாஸ் கும்பல் பார்த்தியைத் தேடி செல்கிறது? அவர்களுக்கும் பார்த்திக்கும் என்ன சம்பந்தம்? யார் அந்த லியோ? என்பதே படத்தின் கதை......
நடிகர் விஜய்யின் படம் என்பதைத் தாண்டி இது இயக்குநர் லோகேஷின் படம். தனது முந்தையை திரைப்படங்களில் பயன்படுத்திய பல அடையாளக் காட்சிகளை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். பழையப் பாடல்கள், துப்பாக்கிக் காட்சிகள், உணவு, விலங்குகளுக்கான சிறப்புக் காட்சிகள் என படம் விரிகிறது. குடும்ப சென்டிமென்ட்டை கையில் எடுத்துள்ளார் லோகேஷ்.
நடிகர் விஜய் நல்ல ஆக்ஷன் மசாலா படமாக வந்திருக்கும் லியோவை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக முதல்பாதியில் வரும் “தாமரைப் பூவுக்கும், தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை” பாடல் நன்றாகப் பொருந்திப் போயிருந்தது. அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
லோகேஷ் திரைப்படத்தில் வரும் பழைய பாடல்கள் இந்த முறை சண்டைக்காட்சியுடன் வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. அனிருத்தின் இசை அருமை.
விஜய்க்கு வில்லன் இன்னும் மாஸ் சாக இருந்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்........
மொத்தத்தில் இந்த 'லியோ' விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்......
RATING: 3.5/5
கருத்துரையிடுக