'புதுவேதம்' திரைப்படத்தின் விமர்சனம்
ராசவிக்ரம் இயக்கத்தில், விட்டல் மூவிஸ் தயாரிப்பில், காக்கா முட்டை சிறுவர்கள் ஜெய் விக்னேஷ், ரமேஷ், இமான் அண்ணாச்சி, மனோகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'புதுவேதம்'.
கணவன் இறந்த நிலையில் மகனோடு கஷ்டப்படும் ஒரு பெண்ணை சில காமுகர்கள் தொந்தரவு செய்கிறார்கள். தன் மகனை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு உதவி செய்ய வரும் நபரோடு ஓடிப் போய் விடுகிறார் அந்தப் பெண். பிறகு அனாதையாகும் சிறுவன் ஒரு பெரிய குப்பை மேட்டில் குப்பை பொறுக்கி பக்கத்திலேயே தங்கி வாழும் சிறுவர் சிறுமியரோடு சேர்ந்து அங்குள்ள பெண்களின் உதவியால் வளர்ந்து பெரியவன் ஆகிறான். அங்கு இருக்கும் கால் இல்லாத ஒரு பையன் நெருங்கிய நண்பன் ஆகிறான். உதவி செய்யும் ஒரு பெண்மணியின் பேத்தி மீது இவனுக்கு காதல் வருகிறது.
ஆனால் அவளோ சற்றே வசதியான ஒரு லாரி டிரைவர் வலையில் விழுந்து கர்ப்பம் ஆகிறாள். காதலனால் ஏமாந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அதேநேரம் அவளை ஏமாற்றியவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கபோவதை தெரிந்து, நியாயம் கேட்க அந்த பெண்ணையும் குழந்தையையும் அழைத்து கொண்டு செல்கிறான் விக்னேஷ்.
பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை......
காக்கா முட்டை விக்னேஷ், காக்கா முட்டை ரமேஷ், சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிறப்பாக நடித்துள்ளனர். மறைந்த மக்கள் டாக்டர் ஜெயச்சந்திரன் நடித்திருப்பது சிறப்பு. அவரை வைத்து படத்தின் இறுதியில் வரும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
குப்பைகளில் கிடக்கும் காலாவதி மருந்துகளை விற்று லாபம் பார்க்கும் காட்சிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பொது மக்களுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இமான் அண்ணாச்சி அவரே பாடி ஆடி கவர்ச்சிப் பெண்களுடன் குத்தாட்டம் போடுகிறார்.
மொத்தத்தில் இந்த 'புதுவேதம்' சிறந்த விழிப்புணர்வு படைப்பு
RATING: 3.5/5
கருத்துரையிடுக