'ஷாட் பூட் த்ரீ' திரைவிமர்சனம்
வெங்கட் பிரபு, சினேகா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் சியாமளா (சினேகா ) சாமிநாதன் (வெங்கட் பிரபு ) தம்பதிகளுக்கு ஒரே மகன் சிறுவன் கைலாஷ் (கைலாஷ் ஹிட் ) இவன் ஆசையாய் ஒரு நாய் வாங்கி செல்லப் பிராணியாக வளர்க்கிறான் நாய் ஒரு நாள் காணாமல் போய் விடுகிறது.
நண்பர்களுடன் சேர்ந்து நாயை தேடுகிறான். நாயை கொன்று புதைக்க திட்டம் போடுகிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள். நாய் மீட்கப்பட்டதா? என்பதை சிறுவர்களின் பயணம் வழியே சொல்லி இருக்கிறார் டைரக்டர்.....
ஒரு சிறிய ஒன் லைன், இதன் வழியே திரைக்கதை என ஒரு நல்ல குழந்தைகள் பொழுது போக்கு படமாக தந்துளார் வைத்திய நாதன். இது குழந்தைகள் படமாக இருந்தாலும் பெற்றோர்களுக்கான பாடமாகவும் வந்துள்ளது ஷாட் பூட் த்ரீ. கார்ப்பரேட் நெருக்கடிகளால் ஒரே குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் உயர் நடுத்தர பெற்றோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சொல்கிறது இப்படம்......
சினேகாவும் வெங்கட் பிரபு வும், ஒரு நடுத்தர வயது பெற்றோர்களாக வாழ்ந்து காட்டிஉள்ளார்கள்.கைலாஷ் ஹிட், பிரணித்தி, வேதாந்த் இந்த மூன்று சிறுவர்களும் சம கால சிறுவர்களை கண் முன் காட்டி விடுகிறார்கள். யோகிபாபு இருக்கிறார் ஆனால் அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நகைசுவைதான் இல்லை.......
மொத்தத்தில் இந்த 'ஷாட் பூட் த்ரீ' நாய் காதல்.......
RATING: 3/5
கருத்துரையிடுக