ஸ்கின்க்யூ உடன் இணைந்து மருத்துவ முக அழகு சேவை பிரிவை துவக்கும் நேச்சுரல்ஸ்!

ஸ்கின்க்யூ உடன் இணைந்து மருத்துவ முக அழகு சேவை பிரிவை துவக்கும் நேச்சுரல்ஸ்!



சென்னை:

புத்தாண்டு 2024-ம் ஆண்டு துவங்க உள்ள நிலையில், தனது சலூன்களில் மருத்துவ முக அழகு சிகிச்சையை துவக்க இருப்பதாக நேச்சுரல்ஸ் சலூன் அறிவித்துள்ளது. நேச்சுரல்ஸ் சலூன், இந்திய சலூன் துறையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மருத்துவ ரீதியிலான முக அழகு சிகிச்சை என்னும்  இதுநாள் வரை தோல் மருத்துவர்களால் மட்டுமே வழங்கப்பட்டு வந்த முக அழகு சேவையை, இப்போது தங்களின் சலூன்களில் உயர் பயிற்சி பெற்ற ஒப்பனையாளர்கள் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்கின்க்யூ உடன் இணைந்து இந்த சேவையை வழங்க இருக்கிறது. விரிவான ஆராய்ச்சி, மருத்துவப் பரிசோதனை மற்றும் இந்திய தட்பவெப்ப நிலைகளின் அடிப்படையில் இங்குள்ள மக்களின் தோலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட முதல் பாதுகாப்பான சான்றளிக்கப்பட்ட ‘மெடி-பேஷியல்’ என்னும் முக அழகு சாதன பொருட்களையும் அறிமுகம் செய்தது. கடந்த 20 வருடங்களுக்கு முன்னரே முன்னோடி முயற்சியாக தொழில்முறை சார்ந்த சலூன் வகை என்ற கருத்தை நேச்சுரல்ஸ் சலூன் அறிமுகப்படுத்தியது. 

இப்போது இது ரூ.100 பில்லியன் வர்த்தகத்தை உருவாக்கி உள்ளது. இன்று, 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் தனது அழகு நிலையத்தின் தலைமைத்துவத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும் விதமாக அழகு என்பதை மருத்துவ அழகுடன் ஒப்பீடு மட்டும் செய்யாமல், அழகு கலைஞர்களை பயிற்சி மற்றும் உயர் திறன்கள் மூலம் அழகியல் நிபுணர்களாகவும் மாற்றி உள்ளது. பிரபல தோல் மருத்துவர் டாக்டர் சித்ரா ஆனந்த் தலைமையில் தயாரிக்கப்படும் ஸ்கின்க்யூ அழகு சாதன மற்றும் முடி பராமரிப்பு பொருட்களுக்கு பாதுகாப்பு சான்றளிக்கப்பட்டு இருப்பதோடு ஆரோக்கியம் மற்றும் புதுமைமிக்க பிராண்டாகவும் அது உள்ளது. 

இது குறித்து பேசிய நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனர் வீணா குமாரவேல் கூறுகையில்:

நேச்சுரல்சைப் பொறுத்தவரை, எங்களின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அழகுத் தேவைகளுக்கு எப்போதும் சிறந்த சேவையை அளிப்பதாகும். மேலும் தொழில்முறைசார்ந்த சலூன் துறையில் எங்களின் நீண்ட அனுபவமும் தலைமைத்துவமும் எங்கள் 740 சலூன்களில் அழகு சிகிச்சை அனுபவத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்து மீண்டும் புதுமையை புகுத்தி உள்ளது. இன்றைய இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பின் மூலம் எங்கள் சலூன்களில் புதுமையான மற்றும் மருத்துவ ரீதியான மெடி-பேஷியல்கள் செய்யப்பட உள்ளது. இவை சிறப்புமிக்க ஸ்கின்க்யூ ஆக்டிவ் பேஷியல் பொருட்கள் மற்றும் சாதனங்களைக் கொண்டு செய்யப்பட உள்ளது. சலூன் துறையில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வரும் நாங்கள் தற்போது ஸ்கின்க்யூவின் சான்றளிக்கப்பட்ட தோல் பராமரிப்பிற்கான மெடி-பேஷியல் கிட்டைப் பயன்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்துவிதமான அழகியல் சேவைகளையும் வழங்க உள்ளோம். முடி திருத்தும் மற்றும் முக அழகு ஒப்பனையாளர்களாக இருந்து தற்போது அழகியல் நிபுணர்களாக மாறியுள்ள எங்களின் அனைத்து ஒப்பனையாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த கூட்டணி குறித்து ஸ்கின்க்யூ நிறுவனர் டாக்டர் சித்ரா ஆனந்த் கூறுகையில்:

மெடி-பேஷியல் என்னும் புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் நீண்ட நெடிய பாரம்பரியத்துடன் இந்தியா முழுவதும் பரந்து விரிந்து இருக்கும் நேச்சுரல்ஸ் உடன் நாங்கள் இணைந்து இருப்பது என்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களின் பியூட்டி 2.0 மிஷனின் நோக்கம் என்பது வெளிப்புறத்தில் மட்டும் ஒருவரை அழகாக மாற்றுவது என்பது மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாக அவருக்கு உள்ள தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினையை கண்டறிந்து அதற்கேற்ப அவருக்கு சேவை வழங்குவதாகும். இதற்காக அழகுக்கலை ஒப்பனையாளர்களுக்கு அவர்களை தங்கள் தொழிலில் இருந்து மேலும் ஒருபடி உயர்த்தும் வகையில் பயிற்சி அளித்து அழகுகலை நிபுணர்களாக மாற்றி உள்ளோம் என்று தெரிவித்தார். 

நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான சிகே. குமாரவேல் கூறுகையில்:

இந்த புதிய முயற்சியை மேற்கொள்வதற்காக ஒன்றிணைந்திருக்கும் நேச்சுரல்ஸ் மற்றும் ஸ்கின்க்யூ குழுவிற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டமானது வாடிக்கையாளர்கள், உரிமையாளர்கள், ஒப்பனையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறைக்கு சாதகமான மாற்றத்தை உருவாக்கும். இதன் காரணமாக இந்தியா முழுவதும் சலூன் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக மாறும். எங்கள் அழகுக்கலை நிபுணர்களின் துல்லியமான மருத்துவ அழகு சிகிச்சை முறைகள் மற்றும் ஸ்கின்க்யூவின் மருத்துவ தரத்திலான அழகு சாதன பொருட்களின் செயல்திறன் ஆகிய இரண்டும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கின்க்யூ நேச்சுரல்ஸ் சலூன் அழகுக்கலை ஒப்பனையாளர்களுக்கு அழகியல் நிபுணர்களுக்கான பயிற்சியை அளிக்க இருக்கிறது. இந்த பயிற்சியின் மூலம் இந்திய மக்களின் தோல் வகைகள், பொதுவான தோல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மிக உயர்ந்த தரமான சேவை வழங்க அவர்களுக்கு நடைமுறை பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்தியாவில் சலூன் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டணியானது ஸ்கின்க்யூ பிராண்டின் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட அழகு சாதன தயாரிப்புகள் மற்றும் நேச்சுரல்சின் அழகியல் நிபுணர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பான, தனித்துவமான மற்றும் பயனுள்ள மேம்பட்ட தோல் பராமரிப்பு சேவைகளை வழங்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

VIDEO HERE:

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.