மூட்டு மாற்று சிகிச்சையில் பிரசாந்த் மருத்துவமனை சாதனை!

மூட்டு மாற்று சிகிச்சையில் பிரசாந்த் மருத்துவமனை சாதனை!சென்னை: 

சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக திகழும் பிரசாந்த் மருத்துவமனை எலும்பியல் பராமரிப்பு ரோபோடிக் பிரிவு துவக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ரோபோடிக் உதவியுடன் 100க்கும் மேற்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.

 

இந்த குறிப்பிடத்தக்க சாதனையை மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும்பிரசாந்த் மருத்துவமனையின் மூட்டு மறுசீரமைப்பில் முன்னோடி டாக்டருமான ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. ‘வெலி’யின் 4வது தலைமுறை ரோபோவைப் பயன்படுத்தி 110 ரோபோ முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து முடித்த நாட்டின் மிகச் சில அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக இவர் உள்ளார்.

 

கடுமையான மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு முழங்கால் செயல்பாட்டை மேம்படுத்த மொத்த முழங்கால் மாற்று சிகிச்சையை மிகவும் சீரான மற்றும் பயனுள்ள செயல்முறையாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு ரோபோ உதவியுடன் செய்யப்படும் சிகிச்சையானது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்ஏனெனில் இது அறுவை சிகிச்சை நிபுணரின் அறுவை சிகிச்சை துல்லியத்தை பல மடங்கு அதிகரிக்க உதவுகிறது. இது அறுவைசிகிச்சையின் போது ஏற்படும் ரத்த இழப்பை வெகுவாக குறைப்பதோடுவழக்கமான முறைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது அறுவை சிகிச்சைக்குப் பின் வலி என்பது மிகக் குறைவாக இருக்கும்.

 

இந்த ஹைடெக் ரோபோவைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும்போது இமேஜ் அடிப்படையிலானசிடி ஸ்கேன் அல்லது வேறு எந்த கதிர்வீச்சு பரிசோதனையும் தேவையில்லை. ரோபோவில் உள்ள கேமரா சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறதுஇது மிக வேகமாகவும்துல்லியமாகவும்ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை படம்பிடிக்க உதவுகிறது. 


மொத்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் வழக்கமாகப் பயன்படுத்தும் கருவிகளைக் காட்டிலும் இதில் உள்ள அமைப்புகள் மருத்துவர்களுக்கு மிகுந்த உதவிகரமாக உள்ளன.  இதன் மூலம் நோயாளியின் முழு மூட்டுவலி குணமாவதோடுஅந்த நோயாளிகள் இயல்பு நிலைக்கு வெகுவேகமாக திரும்பி எளிதாக நடக்கவும் விரைவாக குணமடையவும் செய்கிறது.

 

பிரசாந்த் மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஆறுமுகம் கூறுகையில்:


நாம் வழக்கமான பணிகளை செய்ய நமது கை கால்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது மிகவும் அவசியம் ஆகும். சரியான உடல் எடையை பராமரித்தால் மட்டுமே கால் மூட்டுகளில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

 

அதற்கு நாம் தினந்தோறும் வழக்கமான உடற்பயிற்சி செய்வதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். அவ்வாறு செய்யும்போது அது வயதான காலத்தில் மிகுந்த பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறு செய்யாவிட்டால் இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படுகின்றன. மருத்துவத் துறையை பொறுத்தவரை அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில் எங்கள் மருத்துவமனையில் பல்வேறு நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் உள்ளன. அதில் எங்களின் முழங்கால் மூட்டு ரோபோடிக் அறுவை சிகிச்சை பிரிவானது நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு அவர்களின் பிரச்சினைகள் துல்லியமாக கண்டறியப்பட்டு அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் முழங்கால் மூட்டு சம்பந்தமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும் வகையில் நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ரோபோடிக் உதவியுடன் சிறப்பான சிகிச்சையை அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.

 

மேலும் அவர்  “TKRல் (Total Knee Replacement)  முழங்காலின் மூட்டுவலி முந்தைய நிலையில் சீரமைப்பதுநோயாளிகள் எளிதில் குணமடைவதில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வது தலைமுறை வெலியின் ரோபோவைப் பயன்படுத்துவதன் மூலம்என்னால் முழங்காலை முழுமையாக சீரமைக்க முடிகிறது. ஒவ்வொரு முழங்காலுக்கும் தனித்துவமான சீரமைப்பைச் செய்கிறேன்அதன் மூலம் ஒவ்வொரு காலையும் அதன் மூட்டுவலிக்கு முந்தைய நிலைக்கு சீரமைக்கிறேன். இது எனது அனைத்து நோயாளிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எனது நோயாளிகள் எளிதாக நடக்கவும் விரைவாக குணமடையவும் உதவுகிறது”.

 

இந்த சாதனை குறித்து பிரசாந்த் மருத்துவமைனயின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில்:


மருத்துவ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் எங்களின் உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில்இந்த சாதனை எங்கள் குழுவிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். 2024-ம் ஆண்டை சிறந்த சாதனை உடன் துவங்குவது என்பது எங்களுக்கும் எங்கள் ஊழியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எலும்பியல் சிகிச்சைக்கான சிறந்த மையத்தை திறம்பட வழிநடத்திமுழங்கால் தொடர்பான பிரச்சினை உடைய நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அதிநவீன ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திஎலும்பியல் சிகிச்சைப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் டாக்டர் ஆறுமுகம் மற்றும் அவரது திறமையான மருத்துவர்கள் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வயது அதிகரிப்புஎடை அதிகரிப்புஅதிக உடல் நிறை குறியீட்டெண்உட்கார்ந்த நிலையிலான பணிகள்தசை பலவீனம்மூட்டுவலி பிரச்சனைகள்விபத்துக்கள்மரபணு காரணிகள் மற்றும் முழங்கால் மூட்டு நிலைமைகள் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சினைகளால் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்று இந்த மருத்துவமனை கண்டறிந்துள்ளது. அதேபோல் இந்த பிரச்சினையானது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் இருப்பதாகவும் இம்மருத்துவமனை கூறுகிறது. ஏனெனில் இங்கு சிகிச்சைக்கு வந்த ஆண்களைவிட பெண்களே அதிகம். மேலும் ஒரே நாளில் ஒரு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களைவிட இரண்டு முழங்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களே அதிகம் என்றும் இம்மருத்துவமனை தெரிவிக்கிறது.

 

இம்மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வயதான நோயாளி ஒருவர் கூறுகையில்ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் எனது வாழ்க்கையை மாற்றி அமைத்த இம்மருத்துவமனையின் டாக்டர் குழுவிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆலோசனை முதல் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வரை இங்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

 

முதலில் நான் ரோபோவால் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை சரியாக இருக்குமா என்ற எனக்கு சந்தேகம் எழுந்தது. அறுவை சிகிச்சையின் துல்லியம் எனது சந்தேகத்தை தீர்த்ததுஇதன் விளைவாக நான் மிக விரைவாக எனது இயல்பு நிலைக்கு திரும்பினேன்.

 

ஒரு காலத்தில் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த என்னை அதில் இருந்து விடுவித்து எனது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிய பிராந்த் மருத்துவமனைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுபவம் எனக்கு ஒரு புதிய முழங்காலை மட்டும் கொடுக்கவில்லைஅது எனக்கு வாழ்க்கையில் ஒரு புதிய உத்வேகத்தையும் கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

 

வெலி நிறுவனத்தின் 4வது தலைமுறை ரோபோ 3காட்சிப்படுத்தல் மற்றும் உள்ளுணர்வு கட்டுப்பாட்டு அமைப்புகளை ஒருங்கிணைக்கிறதுமுழங்கால் மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சைகளுக்கான துல்லியமான தரவுகளையும் வழங்குகிறது. இந்த அணுகுமுறை காரணமாகஅறுவைசிகிச்சை நிபுணர்கள் உடனடி முடிவுகளை எடுக்கவும்செயல்திறன் மற்றும் துல்லியத்தை அதிகரிக்கவும் உதவுகிறதுஇதன் விளைவாக வலி மற்றும் ரத்த இழப்பு குறைவதோடு நோயாளி விரைவாக குணமடைந்து வீடு திரும்பலாம்.


VIDEO HERE:


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.