சபாநாயகன் திரைவிமர்சனம்
அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ' சபாநாயகன் '
இந்த படத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருக்கிறார்.
பள்ளி, கல்லூரி கால காதல் கதையை மையமாக வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தில் அசோக் செல்வன் ஒரு நாள் இரவு குடித்துவிட்டு போதையில் இருக்கிறார். இதனால் போலீஸ் அவரை கைது செய்து அழைத்து செல்கிறது. அப்போது செல்லும் வழியில் தன்னுடைய காதல் தோல்விகளை போலீசாரிடம் அசோக் செல்வன் சொல்கிறார்.
அதில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது கார்த்திகா மீது உண்டாகும் காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி மீது ஏற்படும் காதல், எம்பிஏ படிக்கும் போது மேககா ஆகாஷ் மீது ஏற்படும் காதல் என வரிசையாக தன்னுடைய காதல் களைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். இறுதியில் அசோக் செல்வன் தன்னுடைய காதலில் வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை.....
பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. காதல், எமோஷன், காமெடி நன்றாக இருக்கிறது.
படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்....
மொத்தத்தில் இந்த சபாநாயகன் காதல் நாயகன்.....
RATING: 3.5/5
கருத்துரையிடுக