நந்திவர்மன் திரைவிமர்சனம்
அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில் பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி நடித்திருக்கும் படம் "நந்திவர்மன்".
இந்த படத்தில் ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் நடித்துள்ளனர். பெலிக்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்க, சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், செஞ்சி பகுதியில் கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது.
அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வு மேற்கொள்ள அங்கு அனுப்புகிறார். ஆனால், அந்த கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதோடு, அந்த இடத்தில் ஆய்வு நடத்தவும் தடையாக நிற்கிறார்கள்.
பிறகு மக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இந்த கொலைகள் பற்றிய விசாரணையை கையில் எடுக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை........
பெலிக்ஸ் இசையில் பின்னணி இசை சுவாரசியமாக இருந்தது. நந்திவர்மனின் கதையை விவரிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைப்பது போல், கண்ணுக்கு தெரியாத உலோகத்தினால் செய்யப்பட்ட நந்திவர்மனின் மாய வாள், போன்ற விசயங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.
ஆனால் படமாக்கப்பட்ட விதத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.....
மொத்தத்தில் இந்த "நந்திவர்மன்" கிரைம் வர்மன்......
RATING: 3.5
கருத்துரையிடுக