கண்ணகி- திரைவிமர்சனம்
புதுமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலீன் ஜோயா, மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் "கண்ணகி". ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், திருமணத்திற்கு முன் கருவுற்று கருவை கலைக்க முயற்சிக்கும் பெண்ணாக கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். திருமணத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாய் ஃப்ரெண்டுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஷாலீன் ஜோயா, மேலும் கருவுற முடியாத காரணத்தால் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக நடித்திருக்கிறார் வித்யா பிரதீப்.
இவர்கள் நால்வரும் தங்கள் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க, அடுத்தடுத்து அவர்கள் வாழ்வில் என்னென்ன நடக்கிறது? என்பதே மீதி கதை....
உணர்ச்சிகரமான காட்சிகளில் அம்மு அபிராமியின் நடிப்பு சிறப்பு. படத்தின் 4 கதைகளை ஓன்றன்பின் ஒன்றாகக் காண்பித்து குறும்படங்களை இணைத்ததுபோல் இல்லாமல் ஒன்றோடொன்று இணைகோடாகப் பயணிப்பதாகக் காண்பித்திருப்பது முழுமையான திரைப்பட அனுபவத்தைத் தருகிறது.
ஷான் ரஹ்மானின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பாடல்களும் இனிமையாக உள்ளன. ராம்ஜியின் ஒளிப்பதிவு திரைக்கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது. ஆனால்
கதை களம் மெதுவாக நகர்கிறது.... அதில் கூடுதல் கவனம் தேவை......
மொத்தத்தில் இந்த கண்ணகி சமூக அக்கறை உள்ளவள்......
Rating: 3.8/5
கருத்துரையிடுக