பகலறியான்- திரைவிமர்சனம்

பகலறியான்- திரைவிமர்சனம் ரிஷிகேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் லதா முருகன் தயாரிக்க, வெற்றி,  அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, வினு பிரியா நடிப்பில்,  தயாரித்து எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து முருகன் இயக்கி இருக்கும் படம்  தான் 'பகலறியான்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

தந்தையை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்த நாயகன் வெற்றியும், நாயகி அக்‌ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள். வெற்றி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அக்‌ஷயாவின் தந்தை மறுக்கிறார். 

ஆனால், வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் அக்‌ஷயா வீட்டை விட்டு வெளியேறி வெற்றியை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, அவர் தனது  தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வெற்றியுடன் பயணிக்கிறார். 

மறுபக்கம் ரவுடியான முருகன், வீட்டை விட்டு வெளியேறிய தனது தங்கையை தேடி அலைய, அவரின் எதிரிகள் அவரது தங்கையை கடத்தி வைத்து, அதன் மூலம் அவரை பழிதீர்க்க முயற்சிக்கிறார்கள். ஒருபக்கம் எதிரிகளை சமாலித்தவாறு தங்கையை முருகன் தேடிக்கொண்டிருக்க, மறுபக்கம் வெற்றி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வரும் நபரிடம் பணம் வாங்குவது இவரின் வேலை. 

பிறகு அக்‌ஷயா வுக்கு என்ன ஆனது? முருகன் தங்கையை கண்டுபிடித்தாரா? என்பதே மீதி கதை.... 

இசையமைப்பாளர் விவேக் சேரா வின் இசையில் 'நீ ராட்சசனா' பாடல் அழகாக உள்ளது.  

வசனங்கள் மூலம் துணை எழுத்தாளர் விக்னேஷ் குணசேகர் கவனம் ஈர்க்கிறார். அபிலாஷின் ஒளிப்பதிவும் விவேக் சரோவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.  காமெடி நடிகர் சாப்ளின் பாலு , மாற்றுத்திறனாளி தாதாவின் ஆலோசகராக சீரியஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் . 

சாய் தீனாவின்  போலீஸ் காமெடி காட்சி  அவருக்கு  ஒர்கவுட்  ஆகவில்லை. கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

மொத்தத்தில் இந்த பகலறியான் நல்லவன்..... 

RATING:2.6/5லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.