Kobelco CE இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்யும் SK80 எக்ஸ்கவேட்டர்!
சென்னை:
Kobelco கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
அதன் தயாரிப்பான SK80 எக்ஸ்கவேட்டர் சாதனத்தை சென்னை மாநகரில் இன்று அறிமுகம் செய்திருக்கிறது. Kobelco
கன்ஸ்ட்ரக்ஷன்
இந்தியா பிரைவேட் லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் திரு. டேக்மிச்சி ஹிராக்கவா அவர்கள்,
சேனல் பார்ட்னர்கள் முன்னிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, 8 டன் திறன் கொண்ட
நடுத்தரப்பிரிவு வகையின எக்ஸ்கவேட்டரை அறிமுகம் செய்தார்.
உயர் தொழில்நுட்பம், மேம்பட்ட ஹைட்ராலிக் சிஸ்டம், எரிபொருள் திறன், ஆபரேட்டரின் சௌகரியம், நீண்ட காலம் உழைக்கும் திறன், எளிய பராமரிப்பு மற்றும் பன்முக செயல்திறன் போன்ற பல புத்தாக்க அம்சங்கள் கொண்டதாக SK80 எக்ஸ்கவேட்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய சிறப்பான அம்சங்களே இதன் போட்டியாளர்களிடமிருந்து உயர் சிறப்பான இயந்திரமாக நிலைநாட்டுகிறது.
நிலைப்புத்தன்மைக்கான இந்நிறுவனத்தின் பொறுப்புறுதியை
வலுவாக அடிக்கோடிட்டு காட்டுகிறது. தோண்டுவது,
உயரத் தூக்குவது அல்லது தரைப்பரப்பை சமநிலைப்படுத்துவது என பல்வேறு பணிகளை திறம்பட
மேற்கொள்வதற்கு பல்வேறு இணைப்பு சாதனங்களோடு வெளிவரும் SK80 எக்ஸ்கவேட்டரை எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Kobelco கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்
– ன் நிர்வாக இயக்குனர் திரு. டேக்மிச்சி ஹிராக்கவா, இப்புதிய தயாரிப்பு குறித்து
அதிக விவரங்களை பகிர்ந்துகொண்டு கூறியதாவது: “இந்திய கட்டுமான பணிக்கான இயந்திர தொழில்துறையில்
எமது நிறுவனத்தின் 17 ஆண்டுகால பயணத்தில் SK80 எக்ஸ்கவேட்டரின் அறிமுகம், ஒரு முக்கியமான மைல்கல்லாகும். புத்தாக்கம் மற்றும் செயல்நேர்த்தி மீது இந்நிறுவனத்தின்
தொடர்ச்சியான பொறுப்புறுதிக்கு ஒரு சான்றாகவும் மற்றும் “மேக் இன் இந்தியா” செயல்திட்டத்திற்கான
சிறந்த பங்களிப்பாகவும் இருக்கிறது. இந்திய
வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்கிறவாறு உயர்தர எக்ஸ்கவேட்டர்களை
தயாரித்து வழங்குவதில் நீண்டகாலம் நிலைத்து நிற்கின்ற நற்பெயரையும், நம்பிக்கையையும்
நாங்கள் கொண்டிருக்கிறோம். மாறுபட்ட பல்வேறு
பணிகளை எளிதாகவும், திறமையாகவும் கையாள்வதற்கு மேம்பட்ட இயந்திரத்திற்கான தேவையை SK80 எக்ஸ்கவேட்டர் மிக நேர்த்தியாக பூர்த்தி செய்யும். மிக நவீன தொழில்நுட்பமும் மற்றும் SK80 எக்ஸ்கவேட்டரின் வலுவான பொறியியல் அம்சங்களும் நடுத்தர வகையின
எக்ஸ்கவேட்டர் சந்தையில் புதிய தரநிலைகளை நிறுவி, புரட்சிகர மாற்றத்தை உருவாக்குவது
நிச்சயம்.”
ஜப்பானிய உயர் தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கின்ற யான்மார் இன்ஜினைக் கொண்டிருக்கும் இந்த எக்ஸ்கவேட்டர், இவ்வகையினத்தில் மிகச்சிறந்த செயல்திறனை வழங்கும் குறிக்கோளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழலுக்குத் தோழமையான இன் இன்ஜின், எரிபொருள் நுகர்வு அளவையும், மாசு உமிழ்வுகளையும் குறைக்கிறது. இயந்திரத்தின் இயக்கச் செலவுகளையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு அளவுகளையும் இது மிகவும் குறைக்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள மிக நவீன ஹைடிராலிக் சிஸ்டம், மிருதுவான மற்றும் துல்லியமான இயக்க செயல்பாட்டை இந்த சிஸ்டமானது, இந்த இயந்திரத்தின் தோண்டுதல் மற்றும் உயரத்தூக்கும் திறன்களை மேம்படுத்துவதால், பல்வேறு செயல்பாடுகளுக்கும் பொருத்தமானதாக இதனை ஆக்குகிறது. மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய இருக்கையுடன், ஆபரேட்டருக்கு களைப்பு ஏற்படுத்தாத வசதிகள் மற்றும் தாராளமான இடவசதியுடன் கூடிய கேபின், தொடுதிரை வண்ண மானிட்டர் மற்றும் ஆபரேட்டரின் நலத்தையும், சௌகரியத்தையும் உறுதி செய்கின்ற நுண்ணுணர்வு கட்டுப்பாடுகள் என பல சிறப்பு அம்சங்களோடு SK80 எக்ஸ்கவேட்டர் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பணியாற்றுகின்ற தரைப்பரப்புகளும், சூழ்நிலைகளும்
மிக கடுமையானதாக இருந்தாலும் சிறப்பாக செயல்படக்கூடிய இயந்திரமாக இதன் திடகாத்திரமான
கட்டமைப்பு இதனை ஆக்குகிறது. இந்த எக்ஸ்கவேட்டருக்கு
மிக குறைவான பராமரிப்பே தேவைப்படும்; இதன் காரணமாக, அதிக உற்பத்தி திறனும், அதிகபட்ச
காலஅளவிற்கு ஒவ்வொரு நாளும் இயங்கும் ஆற்றலும் உறுதி செய்யப்படுகிறது.
Kobelco கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்பது, கட்டுமானப்பணிக்கான சாதனங்கள் தயாரிப்பில் உலகளவில் முதன்மை நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Kobelco கன்ஸ்ட்ரக்ஷன் மெஷினரி கோ லிமிடெட் (கோப் ஸ்டீல் குரூப்பின் ஒரு அங்கம்) – ன் ஒரு துணை நிறுவனமாகும். Kobelco – ன் தயாரிப்புகள் தொகுப்பில் உயர் செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு எக்ஸ்கவேட்டர்கள் மற்றும் கிரேன்கள் இடம் பெற்றுள்ளன.
VIDEO HERE:
கருத்துரையிடுக