Asthiram Movie Review

அஸ்திரம் திரைவிமர்சனம் 



பெஸ்ட் மூவீஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிக்க, ஷாம், நிரா, அறிமுக நடிகர் ரஞ்சித், வெண்பா, நிழல்கள் ரவி,  அருள் சங்கர், ஜீவா ரவி, மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் ‘அஸ்திரம்’ 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

ஜப்பானிய அரசர் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடித் தோற்றவர்களை, தங்களைத் தாங்களே வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய வைத்த கதை ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது. கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் ஷாம். அவரது மனைவி நிரா ஒரு பத்திரிகையாளர். ஷாம் ஒரு செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க போகும்போது, யாரோ ஒருவர் தோள்பட்டையில் சுட அதனால் ஓய்வு எடுத்து வருகிறார் ஷாம். இந்நிலையில் மூன்று பேர் வெவ்வேறு ஊர்களில் வயிற்றை கிழித்துக்கொண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்கின்றனர். 

இதை விசாரிக்க கான்ஸ்டபிள் சுமந்த்துடன் களத்தில் இறங்குகிறார் ஷாம். விசாரணை குழப்பமாக சென்றுக்கொண்டிருக்க ஒரு நாள் ஷாமின் பழைய நண்பர் விஜய் இவர் வீட்டிற்கு வந்து ஷயாமுக்கு மட்டுமே தெரிந்த வழக்கின் விசாரணைகளை மனப்பாடமாக சொல்கிறார். இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும் என்று கேட்க, அவர் கண் முன்னிலையில் அந்த பழைய நண்பரும் தன் வயிற்றை கிழித்துக்கொண்டு உயிரிழக்கிறார். 

அவர் சாகும் போது மார்டின் என்ற நபர் பற்றி சொல்லுகிறார். யார் அந்த மார்டின்? தற்கொலையின் பின்னணி என்ன? என்பதே மீதி கதை… 

ஷாம் தனது எதார்த்தமான நடிப்பில் சிறப்பாக விசாரணை செய்கிறார். அறிமுக நடிகர் ரஞ்சித் இயல்பாக நடித்திருக்கிறார். கதை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது. மன்னர் காலத்து கதை, வசிய முறை குறித்து படம் பேசுகிறது. பின்னணி இசை விறுவிறுப்பை தூண்டுகிறது. வில்லனாக வரும் விதேஷ் யாதவ் அனைவரையும் பயமுறுத்துகிறார். கான்ஸ்டேபிள் கேரக்டரில் வரும் சுமந்த் சரியான தேர்வு.

கதை புரியாத புதிராக இருக்கிறது..... படத்தின் நீளத்தை குறைத்து இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்..... 

மொத்தத்தில் இந்த 'அஸ்திரம்' வீரியம் குறைவு. 

RATING: 3/5

 

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.