'நாங்கள்' திரை விமர்சனம்!
ஊட்டியில் பள்ளி ஒன்றை நடத்தி வரும் பிஸ்னஸ்மேன் ராஜ்குமார். இவருக்கு கார்த்திக் , கெளதம் , துருவ் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் கார்த்திக் ஒருவன் மட்டுமே தனது தந்தையுடன் ஓரளவிற்கு உரையாடக் கூடிய இடத்தில் இருக்கிறான். மீதி இருவர் தந்தையைக் கண்டாலே அஞ்சி நடுங்குபவர்களாக இருக்கிறார்கள். சிறுவர்களின் அம்மா தனது கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார். கரண்ட், தண்ணீர் இல்லாத பிரம்மாண்டமான வீட்டில் இந்த மூன்று சிறுவர்கள் தங்களுக்கான உலகத்தில் வாழ்கிறார்கள். பள்ளிக்கு கிளம்பிச் செல்கிறார்கள். செல்ல நாய் கேத்தியுடன் விளையாடுகிறார்கள். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து வேலையாட்கள் போல நடந்து கொள்ளும் குழந்தைகள், ஒருகட்டத்தில் வெகுண்டு எழுகிறார்கள். கேரளாவில் உள்ள தாய் பிரார்த்தனாவிடம் செல்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே கதை...
எழுத்து , இயக்கம் , ஒளிப்பதிவு , படத்தொகுப்பு என ஒரே நபர் அனைத்தையும் கையாண்டிருப்பது இந்த படத்தை இன்னும் தனித்துவமான அனுபவமாக மாற்றுகிறது. தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்துல் ரஃபே மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுவர்கள் மிதுன், ரித்திக் மோகன், நிதின் தினேஷ் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
கதை புதிதாக ஒன்றும் இல்லை... நேரத்தை குறைத்து இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்....
மொத்தத்தில் இந்த 'நாங்கள்' இருட்டு வாழ்க்கை.
கருத்துரையிடுக