'லெவன்' விமர்சனம்
நவீன்சந்திரா, ரியா, அபிராமி, ஆடுகளம் நரேன், தீலிபன் ஆகியோர் நடிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் 'லெவன்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
பள்ளி வகுப்பில் 11 இரட்டையர்கள் ஒன்றாக படிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குபின் அந்த இரட்டையர்கள் ஒவ்வொருவராக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அவரை கொலை செய்பவர் இரட்டையர்களில் இன்னொருவர். தனது சொந்த சகோதரன், சகோதரியை கொலை செய்ய துாண்டி சைக்கோ கில்லராக செயல்படுகிறான் வில்லன். இதை விசாரிக்க வந்த காவல் அதிகாரியும் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறார். இதனால், வழக்கு மற்றொரு காவல்துறை அதிகாரியான நாயகன் நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நவீன் சந்திரா வழக்கை விசாரிக்க தொடங்கிய உடன் அவருக்கு பல தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் யார்? அந்த கொலையாளி என்பது தான் பெரிய திருப்பமாக இருக்கிறது.....
இரட்டையர்களில் ஒருவராக வரும் ரித்விகா நடிப்பில் அசத்தியுள்ளார். நவீன் சந்திராவின் காதலியாக வரும் ரியாவிற்கு குறைவான காட்சிகளே உள்ளது. படத்தின் பலமாக அமைந்திருப்பது பள்ளி காட்சிகள்.
அந்த காட்சியை அழுத்தமான திரைக்கதை அமைத்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். சின்ன வயது வில்லனாக வருபவர் நடிப்பும் அபாரம். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு படத்தின் ஓட்டத்தை வேகப்படுத்துகிறது. அட, இமான் இசையா என்று சொல்லும் அளவுக்கு மாறுபட்ட இசையை அவர் தந்து இருக்கிறார்.
கொலை காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த 'லெவன்' ஆர்வம்.
RATING 3.1/5
கருத்துரையிடுக