ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய களம் இறங்கிய சித்தப்பா!
சென்னை:
மவுண்ரோடு பார்டர்தோட்டம் பகுதியில் ஜெண்டா அமைந்துள்ளது. அதனை ஜனாப். A.சாகுல் அமீது (சித்தப்பா) அவர்கள் நாகூர் ஆண்டவர் அவர்களை குருவாக, எஜமானனாக ஏற்று தன்னை நம்பி வரும் மக்களின் கஷ்டங்களை கேட்டறிந்து அவர்களுக்கு ஓதியும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதனால் அனைவரும் அவரை சித்தப்பா என்று அன்போடு அழைத்தனர். அவரின் மறைவிற்கு பிறகு அவரது மகனான A.S முகமது யூசுப் (சித்தப்பா) அவர்கள் அதே பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சுமார் 75க்கும் மேற்பட்ட பார்டர்தோட்டம் மக்களுக்கு 2000ரூ பணமும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன. அனைவரும் முகமது யூசுப் சித்தப்பாவை வாழ்த்தினர். உடன் சித்தப்பாவின் குழுவினர்கள் இருந்தனர்.
இதை பற்றி A.S முகமது யூசுப் சித்தப்பா கூறுகையில்:
எங்கள் எஜமான் நாகூர் ஆண்டவர் துணையால் என் தந்தை ஆசீர்வாதத்தால் பார்டர்தோட்டம் பகுதி மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் வழங்கப்பட்டது. அடுத்த முயற்சியாக நாகூர் ஆண்டவர் ஜெண்டா டிரஸ்ட் தொடங்கி தமிழகம் முழுவதும் என் மக்கள் சேவை தொடரும் என்று கூறினார்.
கருத்துரையிடுக