GANDHI KANNADI MOVIE REVIEW

'காந்தி கண்ணாடி' விமர்சனம்




தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக இருப்பவர் காந்தி. அவரின் மனைவி கண்ணம்மா. அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

காந்திக்கு தன் மனைவி கண்ணம்மா மீது அளவு கடந்த காதல், அன்பு. இந்நிலையில் மனைவியை சந்தோஷப்படுத்த 60வது கல்யாணத்தை திருவிழா மாதிரி கொண்டாட ஆசைப்படுகிறார் காந்தி. அதற்கு எவ்வளவு செலவாகும் என்று இவென்ட் பிளானரான கதிரிடம் கேட்கிறார்.

ரூ. 52 லட்சம் என்று கதிர் சொல்ல தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முடிவு செய்கிறார் காந்தி. கதிர் உதவியுடன் நிலத்தை ரூ. 80 லட்சத்திற்கு அதுவும் ரொக்கமாக விற்பனை செய்கிறார். அவர் கையில் ரொக்கம் வந்து சேரும் நேரம் மத்திய அரசோ பண மதிப்பிழப்பை கொண்டு வந்துவிடுகிறது. இதனால் காந்தி கையில் இருக்கும் நோட்டுகள் எல்லாம் செல்லா நோட்டுகள் ஆக 60வது கல்யாணம் நடந்ததா? இல்லையா? என்பதே கதை....

காந்தி கண்ணாடி படத்தில் இரண்டு ஹீரோ எனலாம். ஒன்று பாலா, மற்றொன்று பாலாஜி சக்திவேல். கே.பி. ஒய். பாலா நிஜத்தில் பலருக்கும் நல்லது செய்து வருகிறார். இந்நிலையில் தான் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் படத்திலும் நல்லது செய்ய முயற்சி செய்திருக்கிறார். சின்னத்திரையில் இருந்து மேலும் ஒரு பிரபலம் பெரிய திரைக்கு வந்திருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி பார்வையாளர்களை அழ வைத்து சிந்திக்க வைக்கிறது. ஆனால், 

பாலாவின் சீரியஸ் நடிப்பு எடுபடவில்லை..... கதையில் கூடுதல் கவனம் தேவை...

மொத்தத்தில் இந்த 'காந்தி கண்ணாடி' யை ஒரு முறை போடலாம்....   

RATING: 3/5



  
This is the most recent post.
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.