THE BED MOVIE REVIEW

 'தி பெட்' விமர்சனம் 



ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் எஸ். மணிபாரதி எழுதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்யா ஸ்ரீதர், விக்ரம் ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'தி பெட்'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஸ்ரீகாந்த், பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோர், வாரத்தின் கடைசி நாட்களை கொண்டாட ஊட்டிக்கு செல்கின்றனர். அவர்களுடன் கால்கேர்ள் சிருஷ்டி டாங்கே இருக்கிறார். அங்குள்ள ரிசார்ட்டில் ஐந்து பேரும் தங்குகின்றனர். ஸ்ரீகாந்தை தவிர மற்ற மூவரும் அதிகமாக மது அருந்தியதால் தூங்கிவிடுகின்றனர். 

ஸ்ரீகாந்தும், சிருஷ்டி டாங்கேவும் வந்த வேலையை விட்டுவிட்டு, இரவு நேரத்தில் ஊட்டியின் அழகை ரசிக்க காட்டுக்கு செல்கின்றனர். அங்கு தனது காதலை ஸ்ரீகாந்த் சொல்ல, அதை சிருஷ்டி டாங்கே ஏற்க மறுக்கிறார். அப்போது ஸ்ரீகாந்துடன் வந்த விக்ரம் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த போலீஸ் விசாரிக்கிறது. திடீரென்று சிருஷ்டி டாங்கே மாயமாகிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை...

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், மென்பொருள்துறை பணியாளர் வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.விலைமகள் எனினும் அவர் மீது காதல் கொண்டு அவரைப் பாதுகாக்கத் துடிக்கும் காட்சிகளில் பாராட்டுப் பெறுகிறார்.எதிர்பாரா சிக்கல் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

ஸ்ருஷ்டி டாங்கே அழகும், அளவான கவர்ச்சியும் கலந்த நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்து, திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஈர்க்கிறார். 

பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், ஜான் விஜய், தேவி பிரியா, திவ்யா ஸ்ரீதர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் இடத்தை நிரப்பி படத்துக்கு நிறை சேர்க்கிறார்கள். ஆனால் 

கதையின் ஓட்டத்தில் கூடுதல் கவனம் தேவை...

மொத்தத்தில் இந்த 'தி பெட்' அமர வைக்கும்.....   

RATING: 3.5/5

  

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.