Latest Post

“மை3” சீரிஸின்  ஃபர்ஸ்ட் லுக்!



சென்னை : 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3”  சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய,  பிரபல இயக்குநர்  ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 

இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். 

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” தயாரிப்பை Trendloud நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

“மை3” டைட்டில் அறிவிப்பை ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ் இணைந்து பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. 

“ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை ஹன்ஷிகா மோத்வானி இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து இந்த வெப் சீரிஸில் பணிபுரிந்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

Chennai Chronicles: Diving Deep into History and Heritage with British Council


Chennai: 

British Council, the UK’s international organisation for cultural relations and educational opportunities, is inviting all history enthusiasts and culture connoisseurs to immerse themselves in the celebration of Madras Day. In observance of this historical occasion, British Council is organising a panel discussion and heritage walk in collaboration with the Madras Literary Society and Nam Veedu Nam Oor Nam Kadhai. The event aims to engage city enthusiasts in an exploration of Madras' rich history, architecture, heritage, and literature.

The panel discussion on “Understanding Madras through Literature, Music, and History” will delve into the multi-faceted aspects of Madras through the lens of literature, music, and history. Distinguished by panellists include Nivedita Louis, Author, Social and Feminist Historian; Meenakshi Devaraj, Historian/Kolam Artist; Monali Bala, Multi Genre/Multi Lingual Musician; Kombai Anwar, an Academic and Tamil documentary filmmaker; and Bessie Cecil, Textile Conservation & Research, Fulbright Scholar.

The engaging session will be moderated by Thirupurasundari Sevvel, Founder, Nam Veedu Nam Oor Nam Kadhai, providing valuable insights into the city's evolution over time. The panellists will share how various resources like traditional songs, ancient poetry, inscriptions, oral narrations, and textiles have contributed to a deeper understanding of Madras.

Discover the captivating stories and hidden treasures that have shaped Chennai's identity during an enriching heritage walk. It promises a delightful exploration of the city's cultural tapestry. Open to all city residents, this heritage walk invites you to be a part of a collective celebration of Madras' past while creating cherished memories along the way.

 

Event details:

Panel Discussion

Where: British Council, 737, Anna Salai, Chennai - 600002

When: Friday, 25 August 2023

Timing: 4.00 to 5.00 p.m

 

Heritage Walk

Starting Point: Higginbothams

When: Sunday, 27 August 2023

Timing: 7.00 a.m

`Dada’ movie fame director Ganesh K Babu presents his next movie titled `Raven’


"A new film is scripted by Dada fame director Ganesh K Babu", This film called`Raven’ is produced by MG Studios and written & screen played by Ganesh K Babu, who is also the director of the film Dada," and the shooting of the new film has begun with a pooja!

On behalf of MG Studios:

APV. Maran is producing `Raven’ along with director Ganesh K Babu, who is doing screenplay and production and is also directed by director Kalyan K Jegan. The shooting of `Raven' starring debut actor Ajay Karthi started today with a simple pooja for the crew to attend. 

Producers Kalaipuli S Thanu:

S.S. Lalith Kumar, and Five Star Kathiresan , Five star Senthil , Rockfort Entertainment Muruganantham, Arun vishwa, Distributor Kovai Aravindh & Directors Por Thozhil  Vignesh Raja, Yaathisai Dharani Rajendran , Good night Vinayak Chandrasekaran were present and congratulated the crew.

`Raven ’ is shaping up to be a film telling the story of the modern generation of newcomers in a diverse field. Director Ganesh K. Babu, who made a comeback in the Tamil film industry with Dada, will write the screenplay, and Kalyan K. Jagan, who worked as his co-director, will make his directorial debut.

Ajay Karthik will make his debut in the film, and actor Nethran's daughter Anchana will play the female lead. Director K. Bhagyaraj,

Vtv Ganesh, Veera , indhumathi and P. Arunachaleswaran are playing the most vital roles in this film. 

The team has decided to shoot the film in one phase. The entire shooting will take place in and around Chennai. Information about the first look and title look of the film will be officially announced soon.

Technical team details:

Production Company – MG studios

Producers - APV. Maran, Ganesh K Babu

Story, Screenplay - Ganesh K Babu. 

Director - Kalyan k jegan

Cinematography - Ravi Shakti

Music Director - Manu Ramesan 

Editor - Kathiresh Alakesan

Art Direction - Shanmuga Raja

Executive Producer:- Meena Arunesh

Sound Design – Arunachalam Shivalingam

Stunt - Naif Naren

Designs – Vikrant

coustume designer - Gayathri Balasubramanian

Stills - Kumaresan

CG - NxGen Media

Public Relations - Thirumurugan, Barani Alagiri


ஆஹா ஓடிடி இணையதளத்தில் “வேற மாறி ஆபிஸ்”



சென்னை: 

ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் “வேற மாறி ஆபிஸ்”. ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில்  வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் உள்ள  நெக்சஸ் விஜயா மாலில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ‘வேற மாறி ஆபிஸ்”-ன் நட்சத்திரங்களான விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரின் இயக்குநரான சிதம்பரம் மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆஹா ஓடிடி இணையதளத்தின் தலைமை நிர்வாகப்  பொறுப்பில் இருக்கும் கவிதா ஜெளபின் பேசும் போது:

“இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும். ஆஹா ஓடிடி இணைய தளத்தில் “வேற மாறி ஆபிஸ்”  புதிய தொடரை தொடங்கி வைப்பது மிகுந்த பெருமை அளிக்கும் விஷயமாகும்.  வேற மாறி ஆபிஸ் என்கின்ற தலைப்பில் உள்ள “வேற மாறி”-க்கும் ஆஹா ஓடிடி க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  இந்த ஓடிடி தளத்தை தொடங்கும் போது வித்தியாசமான கதைக்களங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் தான் இதைத் துவங்கினோம்.  பேட்டைக்காளி, இரத்தசாட்சி இப்படி ஆஹாவில் வெளியான எல்லாத் தொடருமே வித்தியாசமான கதைக்களம் கொண்டது.  அந்த வரிசையில் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் ஒன்லைன் கேட்கும் போதே அது புதியதாகவும் ஜனரஞ்சகமானதாகவும் இருக்கும் என்று தோன்றியது. மேலும் இந்தக் கதைக் களத்தை எடுக்கும் போது தற்போது நிலவும் வேலை இழப்பு பிரச்சனைகள், ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் வளர்ச்சி போன்ற சமகாலப் பிரச்சனைகளையும் கதைக்குள் கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை இருந்தது.  டீசரில் வரும் காட்சியைப் போல்  வேலை செய்யும் இடத்தை சில்ரன்ஸ் பார்க் ஆகவும் அடுத்த நொடியே ஜூராசிக் பார்க்-ஆகவும் பார்த்த அனுபவங்கள் நம் எல்லோருக்குமே இருக்கும். அதனால் இந்த வேற மாறி ஆபிஸ்- உங்கள் அனைவருக்குமே பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  ஆஹா ஓடிடி இது போன்ற தனித்துவமிக்க கதைகளை உங்களுக்கு வழங்க காத்துக் கொண்டிருக்கிறது. எனவே ஆஹா ஓடிடி –யின் பயனாளர்களாக எல்லோரும் மாறுங்கள். “வேற மாறி ஆபிஸ்”க்கு கொடுத்த அதே ஆதரவை எங்கள் தளத்தில் வெளியாகும் எல்லாத் தொடர்களுக்கும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். நன்றி. என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்தின் மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த கிரிஷ் பேசும் போது:

“பொதுவாக ஒரு தொடர் வெற்றி பெற்றப் பின்னர் தான் அதற்கான வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த “வேற மாறி ஆபிஸ்” ஆறு எபிசோடுகள் மட்டுமே வெளியான நிலையிலேயே 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. எனவே இந்தத் தொடரை இன்னும் அதிகமான மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் இந்த நிகழ்வை சற்று முன்கூட்டியே நடத்துகிறோம்.  மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் எங்களுக்கு இது போன்ற ஆர்ட்டிஸ்டுகள் கிடைக்கும் பொழுது எங்களது வேலை இலகுவாகிவிடும். ஏனென்றால் இவர்கள் அனைவருமே தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த ஆர்.ஜே-க்கள், விஜே-க்கள்,  மற்றும் சீரியல் நடிகை நடிகைகள். இதனால் மக்களிடையே “வேற மாதிரி ஆபிஸ்”க்கு கிடைத்திருக்கும் வீச்சி அளப்பரியது' என்றார்.

நடிகர் கண்ணதாசன் பேசும் போது, இது எனக்கு முதல் மேடை. எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சிதம்பரம் சார், தயாரிப்பாளர் சிவகாந்த் சார், கவிதா மேடம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  “வேற மாறி ஆபிஸ்” ஒரு கலகலப்பான தொடர். நீங்கள் அனைவருமே கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர். அது உங்களை கண்டிப்பாக மகிழ்வூட்டும். என் கதாபாத்திரத்திற்கு ஒரு காதல் கதை இருக்கிறது. அந்த காதல் மிகவும் அழகாக இருக்கும். அனைவரும் இந்த தொடருக்கு ஆதரவு அளியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

அவரைத் தொடந்து ஆதித்ய வர்மா, தர்பார் போன்ற படங்களில் நடித்த செளந்தர்யா நஞ்சுண்டன் பேசும் போது:

“எனக்கு மேடை பயம் மிக அதிகம். அதனால் என்னால் நிறைய பேச முடியாது. எனக்கு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.  ஆடியன்ஸ் அனைவருக்குமே “வேற மாறி ஆபிஸ்” தொடர் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.  உங்களால் ஏதாவது ஒரு கதாபாத்திரத்துடன் கண்டிப்பாக உங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.  என் கதாபாத்திரம் உர்ரென்று இருக்கும் கதாபாத்திரம். பெண்களுடன் நான் பேசவேமாட்டேன். எப்பொழுதும் பசங்களுடன் மட்டுமே பேசுவேன். ஆனால் உண்மையில் நான் அதற்கு நேர்மாறானவள்.  என் கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்று பேசினார்.

நடிகை சியாமா அவர்கள் பேசும் போது, இந்தத் தொடரில் நான் சியாமா  கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட நான் எப்படியோ அதையே தான் என் கதாபாத்திரமாகவும் வடிவமைத்திருக்கிறார்கள்.  அனைவருக்கும் நன்றி.  என்று பேசினார்.

ஸ்டேண்ட் அப் காமெடியனும் நடிகருமான விக்கல்ஸ்  விக்ரம்  பேசும் போது:

நாங்கள் பேசுவதை இத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதே சந்தோசமாக இருக்கிறது.  எங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக கட்டி இழுத்துக் கொண்டு செல்லும் பெரும் பணியை செய்வது இயக்குநர் அணி தான். நான் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அது போல் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர், ஆஹா ஓடிடி-யின் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி.  “வேற மாறி ஆபிஸ்” தொடரில் நடித்ததினால் பல நடிப்பு சார்ந்த நுணுக்கங்களை நான் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக் கொண்டேன்.  வி.ஜே.விஜய், வி.ஜே பப்பு போன்றோருக்கு நன்றி.  ஸ்டேண்டப் காமெடி செய்வதற்கும்,  நாடகங்களில் காமெடி செய்வதற்கும்,  ஆங்கரிங் செய்யும் போது காமெடி செய்வதற்கும் உள்ள வித்தியாசங்களை என்னால் உணர முடிகிறது. எங்களை ஊக்குவிக்கும் படி செயலாற்றும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சாருக்கு என் நன்றிகள்” என்று பேசினார்.

சின்னத்திரை நடிகையான லாவண்யா பேசும் போது:

வேற மாறி ஆபிஸ்” தொடரில் என் கதாபாத்திரத்தின் பெயர் “ரம்யா” நீங்கள் லாவண்யாவைப் பார்த்தால் ரம்யாவைப் பார்க்க வேண்டாம். ரம்யாவைப் பார்த்தால் லாவண்யாவைப் பார்க்க வேண்டாம்.  எனக்கே என்ன இது நம் கேரக்டரையே நடிக்கச் சொல்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது.  படப்பிடிப்பு தளம் மிகவும் ஜாலியாக சந்தோசமாக இருக்கும். என் ஸ்டோரிஸ் பார்ப்பவர்களுக்கு அது ஏற்கனவே தெரிந்திருக்கும்.  இந்த தொடருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.



வி.ஜே. பப்பு பேசும் போது:

“வேற மாறி ஆபிஸ்” தொடர் ஒவ்வொரு வாரமும் வியாழன்,  வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. மறக்காமல் இந்த தொடரைப் பார்த்து ஆதரவு அளியுங்கள். ஆஹா ஓடிடி தளத்தை சஃப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். ஒரு படைப்பின் வீச்சு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், அது நாமாக தேடிப் போய் வேண்டுகோள் வைப்பதாக இருக்கக் கூடாது.  அது தான் உண்மையான வீச்சு.  அந்த வெற்றியை “வேற மாறி ஆபிஸ்” தொடர் பெற்றிருக்கிறது. ஏனென்றால் நான் திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு வெற்றியை கொண்டாடும் நிகழ்விற்குப் போயிருந்தேன் அப்பொழுது அவர்கள் உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்  என்று சொன்னார்கள். எனக்குப் புரியவில்லை. பின்னர் தான் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் இரண்டாம் எபிசோடை அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்பது எனக்குப் புரிந்தது. இதுவே அதன் வெற்றி. மேலும் இந்திய அளவில் எந்த தொடரிலும் இல்லாத புதுமையாக இத்தொடரில் 50 எபிசோடுகள் நாங்கள்  எடுக்க இருக்கிறோம்.  இதுவும் ஒரு சாதனை தான்.  “வேற மாறி ஆபிஸ்” தொடர் பார்ட் 1, 2,3 என்று சென்று கொண்டே இருக்க வேண்டும்.  அதில் நாங்களே நடிக்க வேண்டும்.  இனி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்..” என்று பேசினார்.

ஆர்.ஜே. சரித்திரன் பேசும் போது, என் கதாபாத்திரம் ஒரு சிடுமுஞ்சி ஹெச்.ஆர் கதாபாத்திரம்.  எப்பொழுதும் வடை போச்சே என்று நான் தான் பிற கதாபாத்திரங்களை கலாய்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த “வேற மாறி ஆபிஸ்” தொடரில் எல்லோரும் என்னை கலாய்ப்பார்கள்.  எவருக்குமே என்னைப் பிடிக்காது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்.  இன்றைய காலச்சூழலில் பணிச்சுமை எவ்வளவு அழுத்தத்தைக்  கொடுக்கிறது என்பதும் இக்கதையில் இருக்கிறது. அனைவரும் இந்தத் தொடரைப் பார்த்து ஆதரவு தாருங்கள். நான் அடிமட்ட நிலையில் இருந்து பல தடைகளை அவமானங்களை கடந்து இந்த இடத்திற்கு வந்தவன். அதனால் உண்மையாகவே நான் ஹெச்.ஆர் என்னும் பதவியில் இருந்தால் கூட நான் அனுபவித்த கொடுமைகளை இன்னொருவருக்கு செய்ய மாட்டேன். அதுதான் மனிதம் என்று கருதுகிறேன்” என்று பேசினார்.

சின்னத்திரை நடிகரான விஷ்ணு விஜய் பேசும் போது:

இத்தொடரில் நான் “ஜோ” என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  இந்த ஷாப்பிங் மாலில் எப்படியும் பல “ஜோ” –க்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.  “ஜோ” எப்பொழுதும் ஜாலியாக ஊர் சுற்றும் ப்ளே பாய் கதாபாத்திரம். ஆனால் அந்த கதாபாத்திரத்தை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.  எல்லா பெண்களும் “ஜோ”விடம் தான் பாதுகாப்பாகவும் நட்பாகவும் உணர்வார்கள். அதனால் அவனைச் சுற்றி எப்பொழுதும் பெண்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.  என்னுடன் நடித்த சக நடிகர்களுக்கு அது வயிற்றில் புகைச்சலைக் கொடுத்தது.  டைரக்டரிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பேன். அவர் ஒன்றும் இல்லை. அங்கு போய் உட்காருங்கள் என்று என்னை அனுப்பிவிட்டு, என்னோடு பேசிக் கொண்டு இருப்பதற்கு நான்கைந்து பெண்களை அனுப்புவார்.  ஒரு Guardian Angel கதாபாத்திரம் எனக்கு. ஆனால் ஆர்.ஜே விஜய் நடித்த  கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  “வேற மாறி ஆபிஸ்” தொடர் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது. உங்கள் நேரத்தை வீணாக்காது.  கண்டிப்பாக இக்கதையில் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்துடன் உங்கள் குணாதிசயம் ஒத்துப் போகும். இந்தத் தொடரைப்  பார்த்து ஆதரவு கொடுங்கள். ஆஹா ஓடிடி இணையதளத்தின் சந்தாதாரர் ஆகுங்கள் என்று பேசினார்.

’எமர்ஜென்ஸி’, ‘வல்லமை தாராயோ’ 'கனா காணும் காலங்கள்' போன்ற வெப் தொடர்களின் இயக்குநரும் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் இயக்குநருமான சிதம்பரம் மணிவண்ணன் பேசும் போது, ஆஹா ஓடிடி இணையதள நிர்வாகிகளுக்கும், என்னோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் சத்யா,  கலை இயக்குநர் வாசுதேவன், இசையமைப்பாளர் சரண் ராகவன், எடிட்டர் சித்தார்த்தா ரவீந்திரநாத், காஸ்டியூம் டிசைனர் சிமோனா எழுத்தாளர் சத்யா சரவணன் என அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த மேடை பலருக்கும்  முதல் மேடை.  நான் இதற்கு முன் மூன்று வெப் தொடர்கள் இயக்கி இருந்தாலும் இது போல் ஒரு விழா மேடை இதுவே முதல் முறை, இந்த வெஃப் தொடரைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் பொதுமக்களிடம் கொண்டு போய் சேருங்கள். உங்களால் தான் அது முடியும்.  தொடரில் நடித்த அனைவருமே பிஸி ஆர்டிஸ்ட்.  வி.ஜே, ஆர்.ஜே, ஸ்டேண்ட் அப் காமெடியன்கள், சீரியல் நடிகர் நடிகைகள்  அனைவரையும் ஒன்றிணைப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால்  என் உதவி இயக்குநர்கள் சூர்யா, விஜய் ரத்னம், பூர்ணசந்திரன் மற்றும் மேலாளர் வீர சங்கிலி அவர்களும் சிறப்பாக பணியாற்றி என் வேலைப் பளுவை பெரிதும் குறைத்து உதவினார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று பேசினார்.

இசையமைப்பாளர் சரண் ராகவன் பேசும் போது, நான் இதற்கு முன்பு நவம்பர் ஸ்டோரிஸ் –க்கு இசையமைத்திருந்தேன். இப்பொழுது “வேற மாறி ஆபிஸ்”-க்கு இசையமைத்திருக்கிறேன். எனக்கும் இதுதான் முதல் மேடை. இந்த வெஃப் தொடர் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.  ஒருவித ஜாலியான இசைக் கோர்வையை இத்தொடருக்கு இசைத்திருக்கிறேன்; தொடருக்கு நல்ல ஆதரவை கொடுங்கள். எல்லோருக்கும் நன்றி” என்று பேசினார்.

நடிகரும், எழுத்தாளரும், இயக்குநரும் “வேற மாறி ஆபிஸ்” தொடரின் தயாரிப்பாளரும் ஆன சிவகாந்த்  பேசும் போது, “கனா காணும் காலங்கள்” சீரியல் முதற்கொண்டு நான் இயக்கத்தில் இருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரை நான் தயாரிக்க முன்வந்த போது என்னை ஆதரிக்க ஆள் இல்லை. நீ இயக்கினால் நாங்கள் தயாரிக்கிறோம் என்று சொன்னார்கள், ஆனால் நான் தயாரிக்கும் போது யாரும் சப்போர்ட் செய்யவில்லை.  கவிதா மேடம் தான் என் மேல் நம்பிக்கை வைத்து இந்தத் தொடரை தயாரிக்க உதவி புரிந்தார். அது போல்  ஒளிப்பதிவாளர் சத்யா,  எடிட்டர்  சித்தார்த்தா ரவீந்திரநாத், எழுத்தாளர்கள் சத்யா சரவணன் போன்றோர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இது ஒரு ப்ரெண்ட் ப்ராஜட். ஏனென்றால் இது முழுக்க முழுக்க நண்பர்களின் ஆதரவில் உருவானது தான்.  எனக்கும் இதுதான் முதல் மேடை.  தயாரிப்பு என்பது குருவி தலையில் பனங்காய் வைத்த கதை தான்.  இத்தனை ஆர்டிஸ்டுகளை ஒருங்கிணைப்பதற்குள் போதும் போதும் என்று  ஆகிவிடும். கலை இயக்குநர் வாசு அவர்கள் எங்களுக்கு ஆபிஸ்  போன்ற ஒரு அற்புதமான செட்டை உருவாக்கிக் கொடுத்தார். அவருக்கு மிகப்பெரிய நன்றி.  கதாபாத்திர தேர்வில் முதலில் நாங்கள் தேர்வு  செய்தது “Guardian Angel” ஆன விஷ்ணுவைத் தான். ஏனென்றால் அவர் கனா காணும் காலங்கள் காலத்தில் இருந்தே தொடர்பில் இருப்பவர்.  பின்னர் ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். நாங்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தான் இந்த வெஃப் தொடரை உருவாக்கி இருக்கிறோம். “வேற மாறி ஆபிஸ்”-க்கு பின்னால் வேற மாதிரியான பல கதைகள் இருக்கின்றன.  இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம் என்று பேசினார்.

வி.ஜே.பார்வதி பேசும் போது, எங்கள் இயக்குநர் சிதம்பரம் அவர்களுக்கு என் முதற்கண் நன்றி. ஏனென்றால் நான் நன்றாகப் பேசுவேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு நடிக்க  கொஞ்சமாவது வரும் என்பதை எனக்குப் புரிய வைத்தவர் இயக்குநர் சிதம்பரம்  தான். அவருக்கு முதல் நன்றி. இரண்டாம் நன்றி தயரிப்பாளர் சிவகாந்த் மற்றும்  ஆஹா ஓடிடி தளத்திற்கு.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. “வேற மாறி ஆபிஸ்” வெஃப் தொடரை பார்த்து ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

ஆர்.ஜே. மிர்ச்சி விஜய் பேசும் போது,  எங்கள் அணியே மிகவும் கற்பனை நயம் வாய்ந்த அணி.  வந்தவுடனே நான் பேசிவிடுகிறேன் என்று  கூறினேன்.  இல்லை  கடைசியாகப் பேசு என்று பாதி பேர் கிளம்பிச் சென்று இருக்கைகள் காலியானப்  பின்னர் என்னை பேச அழைத்திருக்கிறார்கள்.  படப்பிடிப்பு தளத்தில் என்னோடு நடித்த சக நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு மேடையில் எல்லாரும் சிறப்பாக நடிக்கிறார்கள். என்னை தேர்வு செய்யும் போது நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம், உங்களை வைத்துத் தான் மொத்த கதையும் நகர்கிறது என்று சொன்னார்கள்.  விக்கல் விக்ரம் என்னிடம் வந்து இதே டயலாக்கை கூறினான். அப்பொழுது தான் எல்லோரையும் ஒரே டயலாக் பேசி ஓகே செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த தொடரில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். எங்கள் இயக்குநர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அவருக்கு நன்றி.  நண்பரும் தயாரிப்பாளருமான சிவகாந்த் அவர்களுக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் நன்றி.  நானும் ஐ.டி துறையில் சில ஆண்டுகள் வேலை செய்தவன் என்பதால் இந்தக் கதையை என் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிந்தது.  நீங்களும் பாருங்கள்.  உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள். “ என்று பேசினார்.

FULL VIDEO HERE:
 

GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது!



சென்னை:

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது. 


பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நடைபெற்ற இவ்விழாவில், படக்குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். 


இவ்விழாவினில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசியதாவது,

''பல டிஜிட்டல் துறைகளில் எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது திரைத்துறையில் கால் பதிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது.  இயக்குநர் விஷால் வெங்கட் ஒரு சிறந்த இயக்குநர் அதற்கு அவரது முதல் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  நானும் எங்கள் குழுவும் ஒரு 10 முறை படத்தின் கதையில் சந்தேகங்கள் கேட்டிருப்போம். ஆனால், ஒவ்வொரு முறையும் அனைவருக்கும் பொறுமையாகக் கதையை  விளக்கமாகக் கூறுவார்.  இந்தப் படம் மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும். நாங்கள் தேர்வு செய்துள்ள நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பார்கள். குறிப்பாக காளி வெங்கட் சாருக்கு இது முக்கியமான படமாக இருக்கும். நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா அவர்களுக்கு வாழ்த்துகள். நான் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவரது பாடல்கள் நம்மை மெய் மறக்கச் செய்து விடும். இந்தப் படத்தின் பாடல்களும் அதே போல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். படத்தில் பணிபுரியவுள்ள அத்தனை கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துகள் நன்றி.''


நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, 

''இந்தப் படத்தின் கதையை நான் முழுவதுமாக கேட்டுள்ளேன். ஆனாலும் என்னை நம்பாமல் மீண்டும் படத்தின் கதையை  இயக்குநர் எனக்கு அனுப்பியுள்ளார். இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். அர்ஜுன் தாஸுடன் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளேன். ஆனால் எங்கள் இருவருக்கும் சேர்ந்தது போல காட்சிகள் இல்லை. ஆனால், இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் இணைந்தே பயணம் செய்யவுள்ளது மகிழ்ச்சி. தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். உங்கள் தைரியமும், நம்பிக்கையும் தான் எங்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.''


நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் பேசியதாவது, 

''இயக்குநர் ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார். நாசர் சார் மற்றும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை தான்.  அவரது பாடலுக்காகக் காத்திருக்கிறேன். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.''


இசையமைப்பாளர் இமான் பேசியதாவது,

''GEMBRIO நிறுவனத்தின் முதல் படத் தயாரிப்பில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கொரானா காலத்தில் கேட்டேன். அர்ஜுனின் அநீதி படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள். இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்ன சின்ன நுணுக்கங்களிலும் கவனம் கொண்டு அதற்கென மெனக்கெடல் போட்டுள்ளார். படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன். படத்தின் பாடல்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் வண்ணம் இருக்கும். படத்தின்  தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துகள்.''



இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது, 

''என்னுடைய முதல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி. எனக்கு இந்த இடம் கிடைக்க நீங்கள்தான் காரணம். இந்தப் படத்திற்கும் அதே போல உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி. இந்தப் படத்தில் நான் தேர்வு செய்துள்ள  நடிகர்களுக்கு இந்தப்படம் நல்ல கதாபாத்திரமாக இருக்கும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார். அவருடன் பல விஷயங்கள் பேசியுள்ளேன். அவருக்கு எனது நன்றி.  அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகாவுக்கும் நன்றி. அவர்களுக்கு இந்தப் படம் ஒரு முக்கியப் படமாக இருக்கும்.  இந்தப் படமும் மனிதர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். கூடுதலாக ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாகவும் இருக்கும். எங்கள் இளம் குழுவிற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும். அனைவருக்கும் நன்றி.''


நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது,

''இந்த படத்தில்,  மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது.  நாசர் மாதிரி பெரிய ஆக்டருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள். விஷால் மதுரை வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.''


நடிகர் நாசர் பேசியதாவது,

''தயாரிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துகள். கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதற்குக் காரணம் நீங்கள் தேர்வு செய்த இயக்குநர். இயக்குநர் விஷால் வெங்கட் என்னை ஆச்சரியப்பட வைத்தவர். அவரின் முதல் படத்தில் முதல் நாளிலிருந்தே, அவர் என்னை ஈர்த்து விட்டார். தனது பணியில் மிகவும் தெளிவானவர். நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு இந்தப் படம் மூலம் புது அடையாளம் கிடைக்கும். இந்தப்படம் ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும். இயக்குநர் விஷாலுக்கு நான் எப்போதும் ஆதரவாய் இருப்பேன். வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.''


தயாரிப்பாளர்: சுதா சுகுமார்

இணை தயாரிப்பாளர்: சுரேந்தர் சிகாமணி

நடிகர்கள் :

அர்ஜுன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன். 


 தொழில் நுட்ப கலைஞர்கள்:

இயக்கம் - விஷால் வெங்கட்

இசை - D இமான் 

கதை & திரைக்கதை - மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் 

வசனம்  - மகிழ்நன் BM 

ஒளிப்பதிவு - P.M ராஜ்குமார்

படத்தொகுப்பு - G.K. பிரசன்னா 

கலை இயக்கம் - மனோஜ் குமார் 

உடை வடிவமைப்பு - பிரியா ஹரி, பிரியா கரண்

நடன அமைப்பு - அப்ஸர்  

சண்டைப்பயிற்சி - மான்ஸ்டர் முகேஷ்

Production executive-Dinesh parthasarathy,

Production controller-AS Ayyam Perumal,

Executive producer-D.Saravana Kumar,

விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக்

மக்கள் தொடர்பு  சதீஸ் (AIM)

GEMBRIO TEAM

Suganthi Arun Prasad

Durai Raj

Ajay Kumar



வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும்- சத்யராஜ்


சென்னை:

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. 

ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார்.  மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்-8 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (ஆக-19) மாலை சென்னையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசும்போது:

“இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீபதி என்னிடம் கதையை சொல்வதற்கு முன்பாகவே இந்த படத்தில் நான் ஹீரோ.. நீங்கள் வில்லன்.. ஓகேவா என்றார். இதற்கு முன்னர் இயக்குனர் ராஜமவுலி பாகுபலி படத்திற்காக என்னிடம் பேசியபோது இதேபோலத்தான் கேட்டார். அங்காரகன் முழுக்கதையும் அவர் கூறியபோது கதையும் பிடித்திருந்தது எனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பதற்கான நிறைய வாய்ப்பு இருந்தது.

லவ் டுடே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது கூட ஒரு தயக்கம் இருந்தது. ஆனாலும் ஒப்புக்கொண்டு நடித்தேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் இப்போதெல்லாம் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. தவிர  வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை காலத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். 

என் தாயார் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நான் இந்த விழாவிற்கு வந்துவிட்டேனே என்கிறார்கள். அதற்கு காரணம் எனது அம்மா தான். எங்களது சொந்த பந்தத்தில் 16 நாள் காரியங்கள் முடியாமல் வெளியில் வரக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் நான் பெரியாரிஸ்ட் என்பதால் இரண்டு வருடங்களுக்கு முன்பே என் தாயார் என் சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்து, அவர் இறந்து விட்டால் நான் ஒரே மகன் என்பதால் எந்த சடங்குகளையும் செய்யச் சொல்லி நிர்பந்திக்க கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டார். அப்படி அவர் கூறியதால் தான் என்று இந்த மேடையில் வந்து நிற்க முடிகிறது. 

நான் தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். என் கையில் தற்போது 20 படங்கள் இருக்கின்றன. வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு வரும்போதே எனக்கு தமிழும் அரைகுறை ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என்பதை முதலிலேயே சொல்லிவிடுவேன்.

நல்ல அப்பாவாக தொடர்ந்து நடித்து வருவது போரடிக்கிறது. அதிலும் ஏதாவது வில்லங்கமாக இருந்தால் நடிக்க தயார். அதேபோல நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இதே போல நடிப்பேன் என சொல்ல முடியாது. வில்லனின் கைகளை இயக்குநர் கட்டிப்போடாமல் இருக்க வேண்டும். ஹீரோக்களும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் சினிமாவிற்கு நுழைந்த காலகட்டத்தில் கமல், ரஜினி ஆகியோரின் ஆதரவு இருந்தது. அப்படி இருந்தால் வில்லனாக நடிப்பது ஒரு சுகமான அனுபவம்.  இயக்குனர் மணிவண்ணனை போல என்னை மனதில் வைத்து எனக்காகவே கதாபாத்திரங்களை உருவாக்குபவர்கள் இப்போது இல்லை.. காரணம். அவர் சித்தாந்த ரீதியாக எனக்கு ஒரு குருநாதரும் கூட

கட்சி ஆரம்பிப்பது என்பதெல்லாம் ஓட்டு அரசியல். ஆனால் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்வதும் அதை சொல்பவர்களுக்கு பின்னால் நிற்பதும்கூட அரசியல் தான். நான் அதைத்தான் செய்து வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்கிறார்.. அது கூட அரசியல் தான். ஒரு பிரபலமான கலைஞன் கோழையாக இருந்தால் கோழையான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் காரணமாகி விடுவோம் என்று கூறினார். 

எனக்கு தோன்றிய கருத்துக்களை நான் சொல்வேன்.. நடிகராக இருக்க வேண்டுமா, பெரியாரிஸ்ட்டாக இருக்க வேண்டுமா என்றால் பெரியாரிஸ்ட்டாக இருப்பேன் என அப்போதே முடிவெடுத்தேன். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. ஆண் பெண் பேதம் இல்லை என்பதால் திராவிடர் இயக்கத்தின் பின்னால் நிற்கிறேன். 

நான் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் படம் இயக்கியதால் 3 படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தேன். அந்த அளவிற்கு வேலைப்பளு இருப்பதாலும், நடிப்பது டூர் போவது போல ஜாலியான விஷயம் என்பதாலும் டைரக்சன் பற்றி இப்போது யோசிக்கவில்லை

சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார்.. அதை மாற்றக்கூடாது.. என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார்.. ஏழிசை மன்னர், மக்கள் திலகம், நடிகர் திலகம் என காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் தான் சொந்தமானவர். ரஜினி சாரை மக்கள் திலகம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா ? தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்று கூற முடியுமா ? சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்.. உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என சமீப காலமாகவே ஓடிகொண்டிருந் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனது பேச்சை நிறைவு செய்தார் சத்யராஜ்.

தொழில்நுட்ப குழுவினர் விபரம்:

ஒளிப்பதிவு & இயக்கம் ; மோகன் டச்சு

திரைக்கதை ; இயக்கம் (கிரியேடிவ்)  ; ஸ்ரீபதி

ஒளிப்பதிவாளர் (2வது) ; மாநில அரசு விருது பெற்ற ஆர்.கலைவாணன் 

வசனம் ; கருந்தேள் நாகராஜ்

படத்தொகுப்பு ; மதுரை வளர் பாண்டியன் 

சண்டை காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன் 

நடனம் ; வாசு நவநீதன் 

கலை இயக்குனர் ; கே மாதவன் 

நிர்வாக தயாரிப்பாளர் ; S.கிறிஸ்டி

தயாரிப்பு வடிவமைப்பு ; விவேக் (Primerose Entertainment)

மக்கள் தொடர்பு ; A.ஜான்


VIDEO HERE:

'பரம்பொருள்' டிரெய்லர் வெளியீட்டு விழா!



சென்னை: 

இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது. கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான 'பரம்பொருள்' திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.

சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர். 

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ராக்கி', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். 

'பரம்பொருள்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகையும் இயக்குநருமான‌ சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:


தயாரிப்பாளர்கள் மனோஜ் & கிரிஷ் பேசியதாவது...

'பரம்பொருள்' படத்தில் பணியாற்றிய‌ அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் நன்றி. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்.


இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது... 

இந்நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக‌ மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'பரம்பொருள்' திரைப்படம் வெற்றிபெற அனைவரும் வாழ்த்துவோம்.


நடிகை மற்றும் இயக்குநர் சுஹாசினி மணிரத்னம் பேசியதாவது... 

இங்கு வந்ததில் மகிழ்ச்சி. 'பரம்பொருள்' குழுவிற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


நடிகர் பாலகிருஷ்ணன் பேசியதாவது... 

இத்திரைப்படம் மிகவும் நன்றாக உருவாகியுள்ளது. அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவளிக்க வேன்டும்.


கலை இயக்குந‌ர் குமார் கங்கப்பன் பேசியதாவது... 

'பரம்பொருள்' கதை எல்லாருக்கும் பிடிக்கும். இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். சரத்குமார் சார், யுவன் சார் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். 'பரம்பொருள்' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.


ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் பேசியதாவது... 

உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அனைத்துமே நன்றாக‌ இருக்கும். அந்த வரிசையில் 'பரம்பொருள்' திரைப்படமும் இணையும் என்பதில் ஐயமில்லை.


ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி பேசியதாவது... 

தயாரிப்பாளர்கள், இயக்குநர், அமிதாஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. படத்தின் தலைப்பு மற்றும் கதையைக் கேட்டதிலிருந்தே இதில் பணியாற்ற மிகவும் ஆவலாக இருந்தேன். சரத்குமார் சார் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும் நன்றி.


சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது...

இத்திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்து இதை வெளியிட விரும்பினேன். சரத்குமார் சார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'போர்த்தொழில்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 'பரம்பொருள்' படத்தை பார்த்து அதில் என்னை இணைத்துக் கொண்டேன். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். அமிதாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். 'பரம்பொருள்' நிச்சயம் வெற்றியடையும்.


நடிகர் வின்சன்ட் அசோகன் பேசியதாவது... 

இப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் சிறப்பு அதன் திரைக்கதை. சரத்குமார் சார் மற்றும் அமிதாஷ் நன்றாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டுகிறேன்.


நடிகரும் இயக்குநருமான‌ பாலாஜி சக்திவேல் பேசியதாவது...

'பரம்பொருள்' படத்தின் கதையை கேட்டு மிகவும் ரசித்தேன். அமிதாஷ் மற்றும் சரத் சார் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவரின் சிறப்பான ஒத்துழைப்புடன் படம் உருவாகியுள்ளது.


நடன இயக்குந‌ர் சதீஷ் பேசியதாவது...

இந்தப் படம் யுவன் ஷங்கர் ராஜா சாருக்கு மிக முக்கியமான படமாக அமையும். சரத்குமார் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அமிதாஷ் மற்றும் கிரிஷ் சாருக்கு நன்றி. படம் வெற்றி பெற, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.


இயக்குந‌ர் சி. அரவிந்த் ராஜ் பேசியதாவது... 

இக்கதையை சொன்னவுடன் சரத்குமார் சாருக்கும் அமிதாஷுக்கும் மிகவும் பிடித்தது. சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாள‌ர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் 'பரம்பொருள்' திரைப்படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து ஆதரவை தர வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 


நடிகர் அமிதாஷ் பேசுகையில்... 

பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். 'பரம்பொருள்' படத்திற்கு மேலான ஆதரவை வழங்குமாறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். சரத்குமார் சார் இந்த கதைக்கு தனது முழு ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா சார் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் கிரிஷ் உள்ளிட்ட‌ அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்திற்கு ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் மிகவும் நன்றி. அனைவரும் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும். குறிப்பாக எனது பெற்றோருக்கு நன்றி.


நடிகர் சரத்குமார் பேசுகையில்... 

இது குழு முயற்சி. திரையரங்குகளில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம் 'பரம்பொருள்'. அனைவருக்கும் நன்றி.


இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில்...

எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது, அனைவரும் ரசிப்பார்கள் என்றும் நம்புகிறேன். அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. 'பரம்பொருள்' குழு வெற்றிபெற வாழ்த்துகள்.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.