தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பெரியசேக்காடு குப்பு தெருவைச் சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளியான இவருடைய மகள் பிரீத்தி(வயது 18). இவர், மாதவரம் பால்பண்ணையை அடுத்த தபால் பெட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.. நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரீத்தி, 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த பிரீத்தி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை காவல் ஆய்வாளர் திரு ஆனந்தன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துரையிடுக