கும்பகோணத்தில் நகை, பணத்திற்காக மனைவி கண்ணெதிரே கணவன் கொலை !

கும்பகோணத்தில் நகை, பணத்திற்காக மனைவி கண்ணெதிரே கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 வாலிபர்களை 4 மாதங்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்து ஆயுதங்களை நகைளை கைப்பற்றினர்.

கும்பகோணத்தில் மேலக்காவிரி காவிரிக்கரை பகுதியில் வசித்தவர் துரைசாமி மகன் ராமநாதன் (65). எண்ணை வியாபாரி. இவரது மனைவி விஜயா (58). கடந்த மார்ச் 15ம் தேதி இரவு 8 மணியளவில் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தனியே டிவி பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டுமென 2 வாலிபர்கள் வெற்றிலை பாக்கு பழம், தாம்பூல தட்டுடன் உள்ளே நுழைந்தனர். உடனே விஜயா டிவியின் ஒலியை குறைத்து அணைக்க முயன்றார். ஆனால் வந்தவர்கள் டிவியை நிறுத்த வேண்டாமென கூறியதால் விஜயாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் ராமநாதன் குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டதால் விஜயா சமையலறைக்கு சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே காத்திருந்த மற்ற 3 பேரும் உள்ளே நுழைந்தனர்.
விஜயாவை வலுக்கட்டாயமாக அறைக்குள் அழைத்து சென்று கதவை வெளிப்பக்கமாக தாழ் போட்டனர். பின்னர் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் விஜயாவை கொலை செய்துவிடுவோம் என கொள்ளையர்கள் மிரட்டினர்.
இதனால் பயந்துபோன ராமநாதன், விஜயாவை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என கையெடுத்து கும்பிட்டதுடன், வீட்டில் இருந்த நகை, பணத்தை கொடுத்தார். அதன் பிறகு அறையின் கதவை திறந்து விஜயாவை கொள்ளையர்கள் விடுவித்தனர்.
மேலும் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்பு கம்பியை காட்டி, உன்னை உயிரோடு விட்டால் எங்களை போலீசில் காட்டி கொடுத்துவிடுவாய் என கூறியதுடன் ராமநாதன் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் ராமநாதன் இறந்தார். பின்னர் அங்கிருந்து 5 பேரும் தப்பியோடினர்.
இதுகுறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய பாலக்கரையில் ரசம் வாகன சோதனையில் காவல்துறையினர் இருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 5 பேரை விசாரித்தனர்.
கும்பகோணம் ஆழ்வான்கோவில் தெரு தங்கபாண்டியன் (41), இவனது கூட்டாளிகள் அசூர்ரோடு சித்தி விநாயகர் நகர் வினோத் (30), மேட்டுத்தெரு ஹரிஹரன் (22), தஞ்சை மாதாக்கோட்டை ரஞ்சன் (29), பாலாஜி (25) ஆகிய 5 பேரிடம் விசாரித்ததில் மேற்படி ராமநாதனை மார்ச் மாதம் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.
5 பேரிடம் இருந்து 5 கத்திகள், 3 செல்போன்கள், நாலரை பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.