எனக்கு விவசாயம் தெரியும்: ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?

எனக்கு விவசாயம் தெரியும்: ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?


தூத்துக்குடி:


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

* கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

* மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தியதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளது.

* தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்வு நிலை திரும்பி வருகிறது.

* தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

* நீர் மேலாண்மை திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

* நீர் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

* சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

* பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.

* விவசாயம் பற்றி தெரியாக ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயி, உண்மையான விவசாயி என தெரியும்.

* எனக்கு விவசாயம் தெரியும்; ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?; விவசாயி என்ற சான்றிதழை அவர் தர தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.