கலர்ஸ் கிச்சன்: இந்த வார சுவையான விருந்தில் யார் தெரியுமா?!

கலர்ஸ் கிச்சன்: இந்த வார சுவையான விருந்தில் யார் தெரியுமா?!


புகழ்பெற்ற செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா, ஆகியோர் இணைந்து இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் கலர்ஸ் கிச்சன் எபிசோடுகளில் சுவையான, மாறுபட்ட வெவ்வேறு உணவுகளை எப்படி சமைப்பது என்ற செயல்முறை விளக்கத்தை வழங்கவிருப்பதால் கலர்ஸ் தமிழ் பார்வையாளர்கள் இந்த அற்புதமான விருந்தை சுவைக்க தயாராக இருக்கலாம். 

இந்த நிகழ்ச்சியின் உற்சாகத்தை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச்செல்ல சனிக்கிழமையன்று சுவாதி, ஞாயிறன்று மதுமிதா மற்றும் ஸ்ரீபிரியா ஆகிய பிரபலங்கள் பங்கேற்று செய்வதற்கு எளிமையான ஆனால், சுவையான உணவுகளை சமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கின்றனர்.

கேளிக்கையும், குதூகலமும் கலந்த இந்த நிகழ்வை கண்டு ரசிக்க மற்றும் உங்கள் சுவை நரம்புகளுக்கு தீனிபோட கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் நவம்பர் 21 மற்றும் 21 தேதிகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியை தவறாமல் கண்டு மகிழுங்கள்.

இந்நிகழ்ச்சியின் முதல் பிரிவான “தாமு தர்பார்” – ன் ஒரு அங்கமாக  தக்காளி பச்சடி, சின்ன வெங்காயச் சட்னி மற்றும் சின்ன வெங்காய பச்சடி போன்ற எளிய, சுவையான ரெபிக்களை செஃப் தாமு சமைத்து விளக்கமளிக்கிறார்.  

இந்நிகழ்ச்சியை இன்னும் குதூகலமாக்கும் வகையில் RJ. ஸ்ரீ ரஞ்சனி அழகாக தொகுத்து வழங்குகிறார். 

இந்நிகழ்ச்சியை அதிக பொழுதுபோக்கு நிறைந்ததாக ஆக்கும் வகையில் கீழ்வரும் பிரிவுகளில், அவர்களுக்குள் மறைந்திருக்கும் மாஸ்டர் செஃப்களை வெளிக்கொணர்வதற்காக கேளிக்கையான சில டாஸ்க்குகளில் இதில் பங்கேற்கும் பிரபலங்கள் ஈடுபடுகின்றனர்.  

விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி குக் என்ற பிரிவுகளின் கீழ் வெங்காய பாயாசம், ஈவ்னிங் இடியாப்ப மசாலா, புரோகோலி பிஸ்டாச்சியோ மற்றும் இனிப்பு புளிப்பு சிக்கன் போன்ற வேறுபட்ட, சுவையான உணவுகளை எப்படி சமைப்பதென இந்த பிரபலங்கள் செய்முறை விளக்கத்துடன் காட்சிப்படுத்தவிருக்கின்றனர். 

ஒவ்வொரு  எபிசோடுக்கும் ஒரு அற்புதமான முடிவை வழங்கும் வகையில், “சுடச்சுட சமையல்” என்ற பிரிவின் ஒரு பகுதியாக பண்ணி சௌவ் மற்றும் ஸ்டஃப்டு சப்பாத்தி முக்கோணம்  என்ற இரு பிரபலமான தனது ரெசிபிக்களை செஃப் ஸ்ரேயா அட்கா வழங்குகிறார்.

வாயில் உங்களை அறியாமலேயே உமிழ்நீரை சுரக்கச் செய்யும் இந்த சுவையான உணவுகளை எப்படி சமைப்பது என்று நிபுணர்களிடமிருந்து நேரடியாக கற்றுக்கொள்வதற்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில், 2020 நவம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் எபிசோடுகளை கண்டு பயனடையுங்கள்.






லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.