இந்து மக்கள் தலைநிமிர்ந்து உலக அரங்கில் வளர வேண்டும்!
இன்று வல்லரசு தமிழகம் ( தேர்தல்) 2021 என்ற தலைப்பில் சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலமாக வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் அனைவரும் 100 சதவீதம் தங்களின் வாக்குகளை பதிவு செய்து நல்லரசை தேர்ந்தெடுப்பதை லட்சியமாகக் கொண்டு நமது ஆன்மீக மண்ணை ( கோயில் நிலத்தை) தமிழக இந்து கலாச்சார பழக்கவழக்கங்களை மற்றும் பண்பாடுகளை மீட்டெடுக்கும் அறப்புரட்சியில் இந்து உணர்வுள்ள அனைவரும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடுக்கவுள்ள முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வேற்றுமைகள் மறந்து நாளைய புதிய சரித்திரத்தை தமிழகத்தில் உருவாக்க முன்வரவேண்டும்.
லயோலா கல்லூரி விஷயத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட திருக்கோயில் நிலத்தை திருப்பி மீட்டு எடுக்கும் முயற்சியில் ஒரு விஷயம் மிகவும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது, அது என்னவென்றால் ஆக்கிரமிப்பிற்கு முழுமையான அங்கீகாரம் அளித்தது வேறு யாரும் இல்லை இந்த திராவிட கழகங்கள் (திக) தான்!
ஏன் இந்த அங்கீகாரம் அளித்தது என்ற விவரத்தை சிறப்பு குழுக்களை வைத்து புலனாய்வு செய்தபோது லயோலா கல்லூரி நிர்வாகம் தன் அதிகாரத்தையும் மற்றும் மாணவர்கள் சக்தியையும் பயன்படுத்தி திக - வினரின் வாக்குவங்கியை அதிகரித்து தருவதாக செய்து கொள்ளப்பட்ட எழுதப்படாத ஒப்பந்தம் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் நமது கோயில் நிலங்களையும் மற்றும் பொதுநீர்நிலைகளையும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அவற்றையெல்லாம் பட்டாபோட்டு அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டியுள்ளதும் ஆதரப்பூர்வமாக அம்பலம் ஆகி உள்ளது.
எனவே இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு எடுக்க நமது மக்கள் (இந்து மக்கள்) அனைவரையும் வருகிற தேர்தலில் 100 சதவீதம் ஓட்டு போட வைக்க வேண்டும், 234 தொகுதிகளிலும் நமது மக்களின் வாக்குவங்கியை அதிகரித்து நூறு சதவீதம் வாக்குப்பதிவில் நமது இந்து உணர்வுள்ள அறவழியாளர்களை ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
நாம் தேர்ந்தெடுத்து நிறுத்தக்கூடிய இந்து உணர்வாளர்கள் அறநெறியாளர்களுக்கு நமது அரசியல் கொள்கை எதிரிகளான திராவிட கழங்களைவிட அதிக வாக்குகள் பெற்று வென்று வருகிற தேர்தலில் வல்லரசு தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும்.
இந்து மதம், இந்து கலாச்சாரம், இந்து மக்கள் தலைநிமிர்ந்து உலக அரங்கில் வளர வேண்டும். எவ்வாறு நமது முப்பாட்டன் ராஜராஜ சோழன் தரணியை ஆண்டு சரித்திரம் படைத்தாரே அதே மாதிரி இந்த உலகத்தை நமது இந்து மதத்தாலும், ஆன்மீகத்தாலும் ஏன் இன்னும் சொல்லப்போனால் நமது தமிழ் கலாச்சார பழக்க வழக்கத்தை அனைவரும் தழுவி நிற்க வேண்டும் நமது கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களையெல்லாம் மீட்டெடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வருகிற 06.02.2020 காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் இருந்து ஸ்ரீ வில்லிபுத்துர் ஆண்டாள் திருக்கோயில் வரை நடைபயணம் மற்றும் வாகன பேரணி நடைபெற உள்ளது.
கருத்துரையிடுக