சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி!

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி! 



பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா  பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 16ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமின் வழங்க மறுத்து, மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே பலமுறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

CINEMA ADVERTISEMENT



CINEMA ADVERTISEMENT

 


தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.