Pattamboochi Movie Review: ‘பட்டாம்பூச்சி’ திரைவிமர்சனம்

Pattamboochi Movie Review: ‘பட்டாம்பூச்சி’ திரைவிமர்சனம் 


சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பட்டாம் பூச்சி. எசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் நவ்நீத் இசையமைப்பில் பட்டாம் பூச்சியை இயக்கியிருக்கிறார் பத்ரி நாராயணன்.

பால்யத்தில் தனது தந்தையால் குடும்பவன்முறைக்கு ஆளாகும் சுதாகர்(ஜெய்), வளர்ந்து ஓவியன் ஆகிறார்.தந்தையின் தொடர் துன்புறுத்தல் காரணமாக உடல் மற்றும் மனச் சிக்கலுடன் வாழ்கிறார். எதிர்பாராதவிதமாக செய்யாத கொலைக்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், ஒருசைக்கோவாக மாறி அவர் செய்த 7 கொடூரகொலைகள் பற்றி காவல் துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. சுதாகரே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். கொலைகளுக்கான சாட்சியங்கள் கிடைத்தால் மட்டுமே அவரை குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்கிற நிலையில், அவற்றை கண்டுபிடிக்க களமிறங்கும் காவல் அதிகாரிக்கும் (சுந்தர்.சி) சைக்கோ கில்லரான சுதாகருக்கும் இடையே நடக்கும் ரத்த விளையாட்டுதான் கதை.

கொலையாளி யார் என்பதை எடுத்த எடுப்பிலேயே கூலாக அறிமுகப்படுத்திவிட்டு கதை சொல்லத் தொடங்குகிறார் இயக்குநர். அதனால், ‘திருவாளர் கொலையாளி எப்படி கொலை செய்தால் எங்களுக்கு என்ன?’ என்பதுபோலதிரையரங்குகளில் பாவமாக உட்கார்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள்.

மரண தண்டனை கைதியை வெளியேஅழைத்து வருவது, காவலர் இமான் அண்ணாச்சி கொல்லப்படுவது, நாயகனின் தந்தையையும், தோழியையும் கடத்தி துன்புறுத்துவது உள்ளிட்ட பெரும்பகுதி காட்சிகள் பார்த்து சலித்த ‘டெம்பிளேட்’ ட்ரீட்மென்ட். அதேநேரம் பத்திரிகையாளராக வரும் ஹனி ரோஸ் - சுந்தர்.சி - அவரது அப்பா இடையிலான காட்சிகளில் இழையோடும் குடும்ப, காதல், பாச உணர்வுகள் நன்கு எடுபடுகின்றன.

80's கால கட்டத்திற்கு ஏற்ற ஒளி அமைப்பை உருவாக்கியதில் ஒளிப்பதிவாளர் எசக்கி கிருஷ்ணசாமி மிளிர்கிறார். பாராட்டுகள். நவ்நீத்தின் இசையும் படத்திற்கு பலமே. பட்டாம் பூச்சி நல்ல கதைக் களம் உள்ள சினிமா. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அருமையான கிரைம் சினிமாவாக இது ஹிட் அடித்திருக்கும்.

மொத்தத்தில் இந்த  ‘பட்டாம்பூச்சி’ ஒற்றை சிறகு.... 


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.