மாநில அளவில் வில் வித்தைக்கான நடுவருக்கான பயிற்சி முகாம்!
சென்னை:
வண்டலூரில் உள்ள TNPES பல்கலைகழகத்தில் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கள வில் வித்தைக்கான நடுவருக்கான பயிற்சி முகாம் கா.ரத்ன சபாபதி (பொதுச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்த சங்கம்) அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவினை தொடங்கி வைத்த திரு.எஸ் பெருமாள் சாமி (அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி), திருமதி.மேகலா (Deputy Superintendent Of Police தமிழ்நாடு போலீஸ் அகடமி), திரு.சி ராஜகுமார் (செகரட்டரி பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு அண்ட் புதுச்சேரி), டாக்டர். எஸ்.ஆறுமுகம் (இயக்குனர், தலைமை உடற்கல்வித்துறை, விளையாட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி), திருமதி.எம். ரேவதி (அசிஸ்டன்ட் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்), ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
நிறைவு நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினராக டாக்டர். எம்.சுந்தர் (தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்) மற்றும் டாக்டர் வி.துரைசாமி (அசோசியேட் ப்ரொபசர் இன்சார்ஜ் யோகத்துறை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் துணைத் தலைவர் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம்) கலந்து கொண்டனர். மாநில அளவிலான நடுவருக்கான சான்றிதழை உயர்திரு.டாக்டர்.எம்.சுந்தர் (துணைவேந்தர் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம்) அவர்களால் அனைவருக்கும் நடுவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடுவர்களுக்கு திருமதி.கிரேஸ் ஹெலினா (இயக்குனர் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்) அவர்கள் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
VIDEO HERE:
கருத்துரையிடுக